மேலும் அறிய

Pudhumai Penn Scheme: கல்லூரிப் படிப்புக்கு மாதாமாதம் ரூ.1000: அரசு உதவிபெறும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் அழைப்பு

Pudhumai Penn Scheme in Tamil: புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ (Puthumai Pen Thittam) கீழ்‌, அரசு உதவிபெறும்‌ பள்ளி மாணவிகளுக்கும்‌ உயர்கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000 நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

சென்னை மாவட்டத்தில்‌ 'புதுமைப்‌ பெண்‌" திட்டத்தின்‌ கீழ்‌, வருகிற கல்வியாண்டு முதல்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழிக் கல்வியில்‌ படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000/- வழங்கும்‌ திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே தெரிவித்துள்ளார்‌.

பெண்‌ கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண்‌ சமூகம்‌ நாளைய தமிழகத்தை தாங்கும்‌ அறிவியல்‌ வல்லுநர்களாகவும்‌, மருத்துவராகவும்‌, பொறியாளராகவும்‌, படைப்பாளராகவும்‌, நல்ல குடிமக்களை பேணும்‌ உயர்கல்வி கற்ற பெண்களாகவும்‌, கல்வி அறிவு தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌ உருவாக அடித்தளமாக "புதுமைப்‌ பெண்!" என்னும்‌ உன்னதமான திட்டம்‌ தமிழ்நாடு முதலமைச்சரால்‌ தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம்‌ முழுவதும்‌ சிறப்பான முறையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ மூலமாக "புதுமைப்‌பெண்‌ திட்டத்தில்‌, அரசுப் பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை படித்து மேற்படிப்பில்‌ சேரும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌ உயர் கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000/- அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ சென்னை மாவட்டத்தில்‌ 11,015 மாணவிகள்‌ மாதம்‌ ரூ. 1000/- பெற்று வருகின்றனர்‌. கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில்‌ பயின்ற மாணவிகள்‌ மட்டுமே இந்த திட்டத்தால்‌ பயன் பெற்றனர்‌.

இதனைத்‌ தொடர்ந்து, வருகிற 2024-25ஆம்‌ கல்வியாண்டு முதல்‌'புதுமைப்‌ பெண்‌" திட்டத்தின்‌ வாயிலாக அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழி கல்வியில்‌ படித்த மாணவிகளும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழி கல்வியில்‌ படித்த மாணவிகளுக்கும்‌ உயர்கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000/- ‌வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்‌ என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

எனவே. சென்னை மாவட்டத்தில்‌ உள்ள அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும்‌ மாணவியர்‌ 'புதுமைப்‌ பெண்‌" திட்டத்தில்‌ பயன்பெற அந்தந்தக்‌ கல்லூரியின்‌ சிறப்பு அலுவலர்‌ (நோடல் ஆஃபிஸர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே தெரிவித்துள்ளார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
MG PHEV: 1,100KM ரேஞ்ச் 7 சீட்டர் ஜுலை 16ல் அறிமுகம்..! ப்ளக் இன் ஹைப்ரிட் கார் விலை பேட்டரி விவரங்கள் - முழு டீடெய்ல்
1,100KM ரேஞ்ச் 7 சீட்டர் ஜுலை 16ல் அறிமுகம்..! ப்ளக் இன் ஹைப்ரிட் கார் விலை பேட்டரி விவரங்கள் - முழு டீடெய்ல்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chennai Metro Rail : இனி ரூ.2,500 அபராதம்.! மெட்ரோ ரயிலில் இந்த 3 விதிகளை மீறினால்- சென்னை மெட்ரோ அதிரடி அறிவிப்பு
இனி ரூ.2,500 அபராதம்.! மெட்ரோ ரயிலில் இந்த 3 விதிகளை மீறினால்- சென்னை மெட்ரோ அதிரடி அறிவிப்பு
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Embed widget