மேலும் அறிய

புதுச்சேரி பல்கலைக்கழக 2026-27 கல்வி ஆண்டு Ph.D. சேர்க்கை அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகம் 2026-27 கல்வி ஆண்டிற்கான Ph.D. திட்டங்களுக்கான (Ph.D. Programmes) சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகம் 2026-27 கல்வி ஆண்டிற்கான Ph.D. திட்டங்களுக்கான (Ph.D. Programmes) சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2026-27 கல்வி ஆண்டிற்கான Ph.D. சேர்க்கை அறிவிப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் மற்றும் NAAC-ஆல் "A+" தர அங்கீகாரம் பெற்ற பெருமைக்குரிய புதுச்சேரி பல்கலைக்கழகம் (Pondicherry University), 2026-27 கல்வி ஆண்டிற்கான Ph.D. திட்டங்களுக்கான (Ph.D. Programmes) சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நுழைவுத் தேர்வுப் பிரிவின் கீழ் (Entrance Examination Category) பல்வேறு துறைகளில் முனைவர் பட்டப் படிப்புகளைத் தொடரத் தகுதியான மாணவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

முனைவர் பட்டத்திற்கான கல்வித் தகுதிகள்

Ph.D. திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் 10+2+3+2 என்ற கல்வி முறையிலோ அல்லது 10+2+5 என்ற கல்வி முறையிலோ படித்து, தொடர்புடைய துறையிலோ அல்லது அதனுடன் தொடர்புடைய துறையிலோ முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், மேலாண்மை, வர்த்தகம், அறிவியல், கல்வி, நுண்கலை மற்றும் மொழிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகள்/ துறைகள்/ மையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான தரத்துடன்) முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இறுதி ஆண்டு முதுகலைப் படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சேர்க்கை முறை 

Ph.D. திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை, பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட துறைகள்/மையங்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (Entrance Examination) பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் (Interview) பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்

மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மாற்றுத் திறனாளிகள் (PH), பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), மற்றும் திருநங்கைகளுக்கு (Transgender) விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை (Nil), எனினும் அவர்கள் உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், கட்டணம் 750 ஆகும்; மற்ற பிரிவினருக்கு (Others) விண்ணப்பக் கட்டணம் 1500 ஆகும்.

ஒவ்வொரு திட்டத்திற்கும் (programme) தனித்தனியாக விண்ணப்பம் பயன்படுத்தப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும். தவறான தகவல், தவறான பாடக் குறியீடு, மையக் குறியீடு அல்லது தவறான பிரிவு (OBC/SC/ST/EWS/Gen) அடிப்படையில் கோரப்படும் எந்தவொரு உரிமைகோரலும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் வழிமுறை

Ph.D. சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டிய முக்கியத் தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 முக்கிய தேதிகள்  : 

ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: நவம்பர் 12, 2025
 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30, 2025

விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in மூலம் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். படிப்புகள், தகுதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை (Information Brochure) பார்க்கவும். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் திறமையை வெளிப்படுத்த விரும்பும் மாணவர்களுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்த வாய்ப்பு ஒரு பொன்னான தடமாக அமையும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Embed widget