பிரதமர் மோடியிடம் தங்கப்பதக்கம் பெற்ற தஞ்சை மாணவி; பாரத் கல்வி குழுமத்துக்கு பெருமை சேர்ப்பு
தஞ்சையில் இயங்கி வரும் பாரத் கல்வி குழுமம் மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம் போன்றவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது.
தஞ்சாவூர்: பாரத் மேலாண்மை கல்லூரியில் கடந்த 2012-23ம் ஆண்டு எம்பிஏ படித்த மாணவி மார்ட்டினா ஜாய்ஸ் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்து பிரதமர் மோடியிடம் தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். தொடர்ந்து மாணவியை நேரில் அழைத்து பாரத் கல்வி குழும செயலாளர் புனிதா கணேசன் பாராட்டுக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.
தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமம் அகில இந்திய தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி குழுமத்தில் பாரத் மேலாண்மையில் கல்லூரியில் கடந்த 2022- 23ம் ஆண்டு எம்பிஏ படித்த தஞ்சையை சேர்ந்த மாணவி மார்ட்டினா ஜாய்ஸ் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மாணவி மார்ட்டினா ஜாய்ஸ்க்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
மாணவி மார்ட்டினா ஜாய்ஸ் தங்கப்பதக்கம் பெற்று பாரத் கல்வி குழும கல்லூரிகளுக்கு பெருமை சேர்த்ததையடுத்து பாரத் கல்வி குழும செயலாளர் புனிதா கணேசன், மாணவியை அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மாணவி மார்ட்டினா ஜாய்ஸ், கல்வி குழும செயலாளர் புனிதா கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் குமார், பாரத் கல்லூரி இயக்குனர் முனைவர் வீராசாமி, மேலாண்மையியல் கல்லூரி இயக்குனர் முனைவர் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள் மாணவியை பாராட்டினர்.
இதுகுறித்து பாரத் கல்வி குழும செயலாளர் புனிதா கணேசன் கூறுகையில், மனைவி மார்ட்டினா ஜாய்ஸ் எம்பிஏ தேர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இது மற்ற மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கம் அளிப்பது போல் அமைந்துள்ளது. மாணவியை நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தோம். பாரத் கல்வி குழுமத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளிலும் சிறப்பிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் என்றார்.
தஞ்சையில் இயங்கி வரும் பாரத் கல்வி குழுமம் மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம் போன்றவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. மிக முக்கியமாக தலைசிறந்த பேராசிரியர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை அனைத்து துறைகளிலும் வழங்கி பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்று தனக்கென்று தனி கல்வி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் உயர் கல்விக்கு சட்டென்று தேர்வு செய்வது பாரத் கல்வி குழுமத்தைதான்.
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, அவர்களுக்கான எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சரியான பாதை போன்றவற்றை உருவாக்கி தந்து மாணவ, மாணவிகளின் மனதில் நிலையான வலுவான இடத்தை பாரத் கல்விக்குழுமம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.