மேலும் அறிய

Paramedical Courses Admission: பி.எஸ்சி., பி.ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த  பி.எஸ்சி., பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் இன்று (ஜூன் 19) முதல் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த  பி.எஸ்சி., பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் இன்று (ஜூன் 19) முதல் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.tnmedicalselection.org  என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கிடைக்கவில்லையென்றால் வேறு மருத்துவப் படிப்புகள் இல்லையென்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அவற்றைத் தாண்டி ஏராளமான துணை மருத்துவப் படிப்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. 

நர்ஸிங் படிப்பு, பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதேபோல ஃபார்மஸி படிப்பும் படிக்கலாம். எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம்.

மயக்க மருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம். 

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில்‌ உள்ள இடங்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மருத்துவ பல்கலைக்கழகத்தால்‌ அங்கீகாரம்‌ செய்யப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில்‌ உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில்‌ மருத்துவம்‌ சார்ந்த பட்டப் படிப்புகளில்‌ 2023-2024 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ சேர்வதற்காக விண்ணப்பிக்கலாம்‌.

சேர்க்கை செயல்முறை தொடர்பான தகவல்களை மாணவர்கள்‌ www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில்‌ விண்ணப்பத்தின்‌ தொடக்க நாள்‌ முதல்‌ சேர்க்கை செயல்முறை முடிவடையும்‌ வரை மேற்காணும்‌ வலைத்தளங்களை அடிக்கடி பார்வையிட விண்ணப்பதாரர்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ மருத்துவம்‌ சார்ந்த பட்டப் படிப்பில்‌ சேர்வது தொடர்பாக இணையதளத்தில்‌
அவ்வப்போது வெளியிடப்படும்‌ அறிவிப்புகள்‌ மற்றும்‌ வெளியீடுகளை பார்வையிட தவறுவதால்‌ ஏற்படும்‌ விளைவுகளுக்கு தேர்வுக்குழு பொறுப்பேற்காது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு... 

இணைய தளத்தினை அணுகமுடியாத விண்ணப்பதாரர்கள்‌ தங்களது பெற்றோர்‌ அல்லது பாதுகாவலருடன்‌ அனைத்து அசல்‌ சான்றிதழ்களையும்‌ எடுத்து கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவக்‌ கல்லூரி / தமிழ்நாடு அரசு பல்‌ மருத்துவக்‌ கல்லூரிக்கு நேரடியாக சென்று அங்குள்ள இணையதள உதவி மையத்தை
அணுகி இணையதள விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்யலாம்‌.

விண்ணப்பதாரர்கள்‌ இணைய தளத்திலுள்ள தகவல்‌ தொகுப்பேட்டினை தரவிறக்கம்‌ செய்து, பிரிண்ட் எடுத்து தங்களது பெற்றோர்‌ அல்லது பாதுகாவலருடன்‌ கவனமாகப்‌ படித்து பின்‌ இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய தகவல்களையும்‌ சமர்ப்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்‌ படுகிறார்கள்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

* மாணவர்கள் https://reg23.tnmedicalonline.co.in/pmc//MyCourse.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/18062023212208.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, கையேட்டை பதிவிறக்கம் செய்து வாசிக்க வேண்டும். 

* புதிதாக பதிவு செய்து, லாகின் செய்ய் வேண்டும். 

* கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். 

* இணையதள விண்ணப்ப படிவத்தை ஏற்காத நிகழ்வில்‌ மறுபரிசீலனைக்கு எந்த ஒரு கடிதமோ / கோரிக்கையோ ஏற்றுக்‌கொள்ளப்பட மாட்டாது.

* அதேபோல முழுமையாகப்‌ பூர்த்தி செய்யப்படாத இணையதள விண்ணப்பப் படிவமும்‌ ஏற்றுக்கொள்ளப்படாது.

கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில்‌ ஏதேனும்‌ சந்தேகம்‌ ஏற்பட்டால்‌ தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

1. 044-29862045
2. 044-29862046
3. 044-28363822
4. 044-28364822
5. 044-28365822
6. 044-28366822
7. 044-28367822
8. 044-28361674 

கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/18062023212208.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Embed widget