Palani Murugan Temple: பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நாதஸ்வரம் , தவில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நாதஸ்வரம் , தவில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் நாதஸ்வரம், தவில் கல்லூரி, வேத சிவாகம பாடசாலை ஆகியவை செயல்பட்டு வருகிறது. இவற்றில் சேருவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பழனி முருகன் கோவில் நாதஸ்வரம், தவில் கல்லூரியில் 3 ஆண்டு சான்றிதழ் படிப்பும், வேத சிவாகம பாடசாலையில் 5 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி படிப்பும் உள்ளன. இதில், சேரும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நாதஸ்வரம், தவில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முடிவில் நாதஸ்வரம், தவில் இலவசமாக வழங்கப்படும். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 13 வயது முதல் 16 வயதுடையவர்கள் அடுத்த மாதம் ஜூலை 25-ந்தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். அதேபோல் வேத சிவாகம பாடசாலையில் சேர 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 வயது முதல் 16 வயதுடையவர்கள் அடுத்த மாதம் ஜூலை 25-ந்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்