மேலும் அறிய

Vocational courses: மூட்டைப்‌ பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா? நல்ல திட்டங்களுக்கு மூடு விழா ஏன்?- ஓபிஎஸ் கேள்வி

அம்மா உணவகங்களை நீர்த்துப்‌ போகச்‌ செய்தது, அம்மா இரு சக்கர வாகன மானியத்‌ திட்டத்தை கைவிட்டது, அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா பெயரிலான பல்கலைக்கழகத்தை ரத்து செய்தது...

அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகளை ரத்து செய்ததைத் திரும்பப்‌ பெறுமாறு திமுக அரசை வலியுறுத்துவதாகத் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

“உழவுக்கும்‌ தொழிலுக்கும்‌ வந்தனை செய்வோம்‌, வீணில்‌ உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்‌” என்று கூறிய பாரதியார்‌, பொருளாதாரத்தில்‌ ஒரு நாடு சிறக்க வேண்டுமெனில்‌, உரிமை பெற்ற பாரதம்‌ வீறுபெற்று உலக அரங்கில்‌ தனிச்‌ சிறப்புடன்‌ விளங்க வேண்டுமெனில்‌, தொழிற்‌கல்வி வளர்ச்சி பெறுதல்‌ வேண்டுமென்று வலியுறுத்தினார்‌. இப்படிப்பட்ட இன்றியமையாத்‌ தொழிற்‌ கல்விக்கு மூடு விழா நடத்த தி.மு.க. அரசு முயற்சிப்பது வேதனை அளிக்கிறது.

அம்மா உணவகங்களை நீர்த்துப்‌ போகச்‌ செய்தது, தாலிக்குத்‌ தங்கம்‌ வழங்கும்‌ திட்டத்தை கைவிட்டது, அம்மா இரு சக்கர வாகன மானியத்‌ திட்டத்தை கைவிட்டது, அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா பெயரிலான பல்கலைக்கழகத்தை ரத்து செய்தது என்ற வரிசையில்‌ தற்போது அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகளை ரத்து செய்ய தி.மு.க. அரசு உத்தரவிட்டிருப்பதைப்‌ பார்க்கும்போது, நல்ல திட்டங்களுக்கு மூடு விழா
நடத்துகின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்குகின்றது என்பது தெள்ளத்‌ தெளிவாகிறது.

மாணவர்களை கட்டாயப்படுத்தி வேறு பாடப்‌ பிரிவுக்கு மாற்றுவதா?

தமிழகத்தில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி பிரிவுகளை அடியோடு மூட பள்ளிக்‌ கல்வித்‌ துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்‌, இதன்‌ முதற்கட்டமாக தற்காலிக ஆசிரியர்கள்‌ உள்ள பள்ளிகள்‌, ஓய்வு பெறும்‌ நிலையில்‌ உள்ள ஆசிரியர்கள்‌ பணியாற்றும்‌ பள்ளிகள்‌ ஆகியவற்றில்‌ உள்ள தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகளை மூடுமாறும்‌, அங்கு பதினொன்றாம்‌ வகுப்பு தொழிற்கல்வி பாடப்‌ பிரிவில்‌ சேர்க்கப்பட்ட மாணவர்‌ சேர்க்கையை ரத்து செய்யுமாறும்‌, அந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வேறு பாடப்‌ பிரிவுக்கு மாற்றுமாறும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை ஆணையர்‌ உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்‌ அடிப்படையில்‌ தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல்‌ போன்ற மாவட்டங்களில்‌ உள்ள பல்வேறு பள்ளிகளில்‌ தொழிற்கல்வி படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்‌ ஊடகங்களில்‌ செய்திகள்‌ வந்தன. இந்த‌ செய்தி வெளியானதையடுத்து, இதுகுறித்து உரிய விவரங்களை அளிக்குமாறு பள்ளிக்‌ கல்வித்‌ துறைச்‌ செயலாளர்‌ கேட்டுள்ளதாகவும்‌ பத்திரிகைகளில்‌ செய்தி வந்துள்ளது. 

இதிலிருந்து, அரசுக்குத் தெரியாமலேயே, அரசுப்‌ பள்ளிகளில்‌ உள்ள தொழிற்கல்வி பாடப்‌ பிரிவை ரத்து செய்ய பள்ளிக்‌ கல்வித்‌ துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகத்‌ தெரிகிறது. இதன்மூலம்‌, - அரசுக்கும்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கும்‌ இடையே ஓர்‌ ஒருங்கிணைப்பு இல்லை என்பதும்‌ தெளிவாகிறது.


Vocational courses: மூட்டைப்‌ பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா? நல்ல திட்டங்களுக்கு மூடு விழா ஏன்?- ஓபிஎஸ் கேள்வி

மூட்டைப்‌ பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா?

ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக இருப்பதுதான்‌ தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகள்‌ மூடப்படுவதற்கு காரணம்‌ என்று சொல்லப்படுகின்ற நிலையில்‌, ஆசிரியர்‌ பணியிடங்களை நிரப்பி அதனைத்‌ தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்காமல்‌, அவற்றையெல்லாம்‌ மூடும்‌ முடிவை பள்ளிக்‌ கல்வித்‌ துறை எடுத்திருப்பது “மூட்டைப்‌ பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியது மாதிரி” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. இது நாட்டின்‌ கல்வி வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு மட்டுமல்லாமல்‌, பொருளாதாரம்‌ பாதிப்படையவும்‌, வேலைவாய்ப்புகள்‌ இருந்தும்‌ அதற்கான ஆட்கள்‌ இல்லாத சூழ்நிலை உருவாகவும்‌ வாய்ப்பு இருக்கிறது. 

அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி ரத்து செய்யப்படுவது என்ற முடிவு கடும்‌ கண்டனத்திற்குரியது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்‌. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாகத்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடப்‌ பிரிவுகள்‌ மூடப்படுவதை தடுத்து நிறுத்தவும்‌, தொழிற்கல்வி தொடர்ந்து சிறப்பாக செயல்படவும்‌ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌''.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Embed widget