மேலும் அறிய

Ponmudi on Exams: மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணா யுனிவர்சிட்டி.. விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பொன்முடி!

தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களுக்கு ஆப்சென்ட் போட்டிருந்தால் அது தவறு என்றும், அந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் எனவும் கூறினார்.

தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் என்றும், இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அண்ணா பல்கலைக்கழத்தின் இந்த உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களுக்கு ஆப்சென்ட் போட்டிருந்தால் அது தவறு என்றும், அந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும், தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்றும், ஆன்லைன் தேர்வுகளால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

TN Budget 2022: அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆகும் முழுச் செலவையும் அரசே ஏற்கும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

முன்னதாக, கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் தங்களது விடைத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், ஆன்லைனில் தேர்வு நடைபெற்ற தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆப்சென்ட் வழங்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. தாமதமாக பதிவேற்றம் செய்திருந்த மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விடைத்தாள் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதாக விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம், உரிய கால அவகாசம் வழங்கியும் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிட்டுதான் முடிவுகள் வெளியாகும் எனவும் கூறியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் கூறியுள்ளார்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆப்சென்ட் எனக் குறிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். வழக்கமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Hyperloop Technology: சென்னை டூ பெங்களூரு 25 நிமிடத்திலா? சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய முயற்சி ..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
VIT Vellore: ''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்
''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Embed widget