மேலும் அறிய

NIFT 2024: ஃபேஷன் டிசைனிங் படிக்கலாம்; நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தேர்வர்கள் nift.ac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜனவரி 3ஆம் தேதி) கடைசித் தேதியாகும்.

ஃபேஷன் டிசைனிங் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நிஃப்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜனவரி 3ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.  

ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் நிஃப்ட் எனப்படும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அணிகலன் வடிவமைப்பு, ஃபேஷன் கம்யூனிகேஷன், ஃபேஷன் வடிவமைப்பு, பின்னலாடை வடிவமைப்பு, தோல் வடிவமைப்பு மற்றும் ஜவுளி வடிவமைப்பு உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளைக் கற்பிக்கின்றன. ( B.Des. (Fashion Design), B.Des. (Leather Design), B.Des. (Accessory Design), B.Des. (Textile Design), B.Des. (Knitwear Design), B.Des. (Fashion Communication), B.FTech. (Apparel Production)

அதேபோல, முதுகலை வடிவமைப்புத் திட்டங்களும் (MDes) கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதுகலை ஃபேஷன் மேலாண்மை (MFM), முதுகலை ஃபேஷன் தொழில்நுட்பம் (MFTech) உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.

என்ன தகுதி?

IFT 2024 Eligibility Criteria: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10, 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அதிகபட்சம்  ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதேபோல நிஃப்ட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதும் அவசியம்.

நிஃப்ட் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு ரூ.3,000 விண்ணப்பக் கட்டணமாகும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, டிசைனிங் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகளுக்கும் (BDes, BFTech) விண்ணப்பிக்க ரூ.4,500 விண்ணப்பக் கட்டணம் ஆகும். இதுவே எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் nift.ac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜனவரி 3ஆம் தேதி) கடைசித் தேதியாகும்.

தேர்வு எப்போது?

நாடு முழுவதும் 60 நகரங்களில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நிஃப்ட் 2024-க்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3ஆவது வாரத்தில் வெளியாக உள்ளது.  தேர்வர்கள் nift.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://exams.nta.ac.in/NIFT/ என்ற இணைப்பை க்ளிக் செது விண்ணப்பிக்க வேண்டும். அல்லது https://nift.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://nift.ac.in/sites/default/files/inline-files/PROSPECTUS-2024.pdf

தேர்வு முடிவுகள் எப்போது?

வழக்கமாக நுழைவுத் தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும். ஏப்ரல் மாதத்தில் நேரடித் தேர்வு நடைபெறும். இறுதிக்கட்டத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும். 

விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், NIFTADMISSIONSIN@GMAIL.COM என்ற இ- மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: nift.ac.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Breaking News LIVE: மதுரையில் மெட்ரோ வழித்தடம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE: மதுரையில் மெட்ரோ வழித்தடம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Embed widget