NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் ஒருவரையும் சும்மா விட மாட்டோம்- அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

அடுத்த கல்வியாண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் இனி முறைகேடுகள் எதுவும் நடைபெறாது எனவும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இத்குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
’’ஓஎம்ஆர் முறையை விட, கணினி வழித் தேர்வு இன்னும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். சைபர் கிரைம் அச்சுறுத்தல் ஆக இருக்கிறது. என்னதான் சவால்கள் இருந்தாலும், நாட்டின் சிஸ்டத்தை நம்பித்தான் ஆக வேண்டும். நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
#WATCH | Delhi | On NEET re-examination, Union Education Minister Dharmendra Pradhan says, "The root cause of this was OMR and therefore, from the next year, the exam will be conducted in Computer-Based Test (CBT) mode..." pic.twitter.com/5BepLQD7CC
— ANI (@ANI) May 15, 2026
அடுத்த கல்வியாண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இனி முறைகேடுகள் எதுவும் நடைபெற விட மாட்டோம். ஏற்கெனவே நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் ஒருவரையும் சும்மா விட மாட்டோம்.
நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மே 8ஆம் தேதி சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், முறைகேடு அறியப்பட்டு மே 12ஆம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் நலனில் சமரசம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். ஏற்கெனவே ராதாகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
என்டிஏவில் எந்த தவறும் பிரச்சினையும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே தேசியத் தேர்வுகள் முகமை உருவாக்கப்பட்டது. இதன்கீழ் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மறு தேர்வு எப்போது?
மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















