மேலும் அறிய

NEET Exam: மே 5-ல் நீட் தேர்வு; நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்; தமிழகத்தில் எவ்வளவு?

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் இளநிலை நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வை எழுத சுமார் 23.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (சுருக்கமாக நீட் தேர்வு) என அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  

இதற்கிடையே நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 16-ம் தேதியுடன் முடிவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி.யில்தான் அதிகம்

இதில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் உள்ளனர். மாணவர்கள் 10 லட்சத்து 18,593 பேரும், மாணவிகள் 13 லட்சத்து 63,216 பேரும் உள்ளனர். மாற்றுப் பாலின மாணவர்கள் 24 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3 லட்சத்து 39,125 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை மாணவர்கள் விண்ணப்பம்?

இந்த எண்ணிக்கை தமிழகத்தில் 1,55,216 ஆக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும், நீட் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

2022-ம் ஆண்டு நீட் தேர்வெழுத 18 லட்சத்து 72,343 பேரும், 2023-ம் ஆண்டில் 20 லட்சத்து 87,449 பேரும் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு, எண்ணிக்கை அதிகரித்து 23 லட்சத்து 81,833 மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் நீட் பயிற்சி

இதற்கிடையே தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கௌக்கு இன்று (மார்ச் 25) முதல், நீட் பயிற்சி கல்வி மாவட்ட அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இரு வேளை உணவுடன், போக்குவரத்துக் கட்டணமும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NEET

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
இ-பட்டா இருக்கு ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க.. மதுரையில் முதிய தம்பதி கண்ணீர்
இ-பட்டா இருக்கு ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க.. மதுரையில் முதிய தம்பதி கண்ணீர்
Embed widget