மேலும் அறிய

NEET training: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சியா?- அன்புமணி கேள்வி

பணக்கார மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை நீட் பயிற்சி பெறும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெறும் 14 நாட்கள் மட்டும் பயிற்சி அளிப்பதா என்று தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். 

நகர்ப்புற பணக்கார மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை நீட் பயிற்சி பெறும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெறும் 14 நாட்கள் மட்டும் பயிற்சி அளிப்பதா என்று தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:    

''தமிழ்நாட்டில் அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை  அறிவித்திருக்கிறது.

அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்த பிறகும் நீட் பயிற்சி தொடங்கப்படாததை நேற்று முன் தினம் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதே நாளில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர், இதுகுறித்து விவாதித்து பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பித்திருத்திருக்கிறார். நீட் பயிற்சி வகுப்புகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டாலும், ஓரளவு மேம்படுத்தப்பட்ட வடிவில் நடத்தப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அனைத்து பயிற்சி மையங்களிலும் நேரடியாக பயிற்சி அளிக்கப்படும். கடந்த காலங்களில் மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் முதலில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு  ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரிப் பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரு வகைப் பயிற்சிகளிலும் பல குறைபாடுகள் இருந்தன என்பதை எவரும், எங்கும், எப்போதும் மறுக்க முடியாது.

கடந்த காலப் பயிற்சிகளில் போதாமை

முதல் வகை பயிற்சி வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்பட்டாலும் முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெற்றது. அதில் ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அதை மாணவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வாய்ப்புகள் இல்லை. இரண்டாவது வகையான பயிற்சி வழங்கப்பட்ட ஹைடெக் ஆய்வகங்கள் எனப்படுபவை சாதாரணமான கணினி வசதி கொண்ட ஆய்வகங்கள்தான். அவற்றில் மாணவர்கள் தாங்களாகவேதான் இணையத்தில் உள்ள தகவல்களை படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இதில்  மாணவர்களுக்கு வழிகாட்ட  வல்லுனர்கள் இல்லாததால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

ஆனால், இப்போது 412 மையங்களில் நேரடியாகப் பயிற்சி அளிக்கப்பட இருப்பதால் மாணவர்கள் தங்களின் ஐயங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற முடியும். குறிப்பிட்ட இடைவெளியில் மாதிரித் தேர்வுகளை நடத்தி மாணவர்களின் திறனை மதிப்பிட முடியும். இது புதிய முறையின் சிறப்புகளாகும்.


NEET training: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சியா?- அன்புமணி கேள்வி

14 நாட்கள் மட்டும் பயிற்சியா?

எனினும், நவம்பர் மூன்றாவது சனிக்கிழமை தொடங்கும் நீட் பயிற்சி வகுப்புகளை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரை, ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய நாள், பொங்கல் திருநாள், தேர்வுக்கு முந்தைய சனிக்கிழமை தவிர, அதிகபட்சமாக 14 நாட்கள் மட்டும்தான் நடத்த முடியும். தனியார் பள்ளிகளில் பயிலும் நகர்ப்புற பணக்கார மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை பயிற்சி பெறும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெறும் 14 நாட்கள் மட்டும் பயிற்சி அளிப்பது போதுமானதாக இருக்காது.  இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதற்கான மாற்று ஏற்பாடுகளை கல்வித்துறை செய்ய வேண்டும்.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அதற்கான கையேடுகளும், வினா - விடை தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன. அவை நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள பெரும் உதவியாக உள்ளன. அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கும் கையேடு மற்றும் வினா - விடை தொகுப்பை இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். முதல் வார சனிக்கிழமையில் நடத்தப்படும் பாடம் குறித்து அடுத்த வாரத்தில் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நீட் பயிற்சியை ஏதோ கடமைக்கு வழங்கப்படும் ஒன்றாக கருதாமல், தொழில்முறையானதாக மாற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்களில் குறைந்தது 100 பேராவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இல்லாமல் பொதுப்போட்டி  பிரிவில் மருத்துவப் படிப்பில் சேரும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவிப்பு! தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவிப்பு! தவறினால் என்ன நடக்கும்?
 ICAI சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தீக்‌ஷா முதலிடம்- எவ்வளவு மதிப்பெண்கள்? மற்றவர்கள் எப்படி?
 ICAI சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தீக்‌ஷா முதலிடம்- எவ்வளவு மதிப்பெண்கள்? மற்றவர்கள் எப்படி?
IIT Madras: மார்பகப் புற்றுநோய்: இந்தியாவில் அதிர்ச்சி தரும் மரபணு பாதிப்பு! ஐஐடி சென்னை ஆய்வு சொல்வது என்ன?
IIT Madras: மார்பகப் புற்றுநோய்: இந்தியாவில் அதிர்ச்சி தரும் மரபணு பாதிப்பு! ஐஐடி சென்னை ஆய்வு சொல்வது என்ன?
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget