மேலும் அறிய

NEET Exam Syllabus Change: ‛மாணவர்களா கால்பந்தா?' - நீட் தேர்வு விவகாரத்தில் கொதித்தெழுந்த உச்சநீதிமன்றம்!

மாணவர்கள் இதுபோன்ற தேர்வுகளுக்காக மாதக்கணக்கில் தயார் செய்கிறார்கள். தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எதற்காகப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறீர்கள்? -உச்சநீதிமன்றம் கேள்வி

மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களுக்கான நீட் தேர்வு பாடத்திட்டத்தில் இறுதி நிமிடத்தில் மாற்றம் கொண்டு வந்ததை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. ’மாணவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆட்டத்துக்கான ஃபுட்பால் அல்ல’ என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வுகள் வருகின்ற நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 23 ஜூலை 2021ல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம் எல்லாம் ஆகஸ்ட் 31ல் தான் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து 41 மருத்துவர்களால் தொடரப்பட்ட வழக்கில் தேசியத் தேர்வு வாரியம், தேசிய மருத்துவக் ஆணையம் மற்றும் மத்திய அரசை கடினமாகச் சாடியுள்ளது உச்சநீதிமன்றம். 

NEET Exam Syllabus Change: ‛மாணவர்களா கால்பந்தா?' - நீட் தேர்வு விவகாரத்தில் கொதித்தெழுந்த உச்சநீதிமன்றம்!
’மாணவர்கள் இதுபோன்ற தேர்வுகளுக்காக மாதக்கணக்கில் தயார் செய்கிறார்கள். தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எதற்காகப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறீர்கள்? உங்கள் தரப்பு வாதத்தையும் கேட்கிறோம் ஆனால் உங்களது இந்தச் செயல் அதிருப்திகரமானதாக உள்ளது. உங்களிடம் அதிகாரம் உள்ளது என்பதற்காக அதனை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா? உங்கள் அதிகார விளையாட்டில் மாணவர்களைப் பந்தாகப் பயன்படுத்தாதீர்கள். என விசாரனை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 
நீதிபதி நாகரத்னா கூறுகையில், ‘புதிய பாடத்திட்டம் நுழைவுத்தேர்வுக்கானதாக இல்லாமல் இறுதியாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டம் போல உள்ளது’ எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பு ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, நீட் மருத்துவத் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அனைத்திந்திய கோட்டாவில் 27 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்.  உத்தரவிட்டுள்ளது.

நீட் மருத்துவத் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதமும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு செய்து அண்மையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த இரண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ‘அப்போது பொதுப்பிரிவினர் என்ன செய்வார்கள்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசுட் மற்றும் நாகரத்னா தலைமையிலான அமர்வு வருகின்ற 6 அக்டோபருக்குள் மத்திய அரசில் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.  மற்றொரு மனுவில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கான நீட் ஒதுக்கீட்டுக்கான வரையறையாக 8 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டாகடர் மது கவிஷ்வர் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
Sengottaiyan : ’காலம்போன காலத்தில் TVK’ இன்னொரு புஸ்ஸி ஆனந்தா செங்கோட்டையன்..?
’காலம்போன காலத்தில் TVK’ இன்னொரு புஸ்ஸி ஆனந்தா செங்கோட்டையன்..?
Gautam Gambhir: சொன்னதை செய்ய மாட்டேன், மாத்தி மாத்தி பேசுவேன் - கன் டீம்? அந்தர் பல்டி அடிக்கும் கம்பீர்..
Gautam Gambhir: சொன்னதை செய்ய மாட்டேன், மாத்தி மாத்தி பேசுவேன் - கன் டீம்? அந்தர் பல்டி அடிக்கும் கம்பீர்..
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
Sengottaiyan : ’காலம்போன காலத்தில் TVK’ இன்னொரு புஸ்ஸி ஆனந்தா செங்கோட்டையன்..?
’காலம்போன காலத்தில் TVK’ இன்னொரு புஸ்ஸி ஆனந்தா செங்கோட்டையன்..?
Gautam Gambhir: சொன்னதை செய்ய மாட்டேன், மாத்தி மாத்தி பேசுவேன் - கன் டீம்? அந்தர் பல்டி அடிக்கும் கம்பீர்..
Gautam Gambhir: சொன்னதை செய்ய மாட்டேன், மாத்தி மாத்தி பேசுவேன் - கன் டீம்? அந்தர் பல்டி அடிக்கும் கம்பீர்..
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை  - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
Embed widget