மேலும் அறிய

NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!

நீட் தேர்வு முறைகேடு: கழிப்பறையில் முன்கூட்டியே செல்போனை மறைத்து வைத்து ஹைடெக் காப்பி அடித்த மாணவர் கைது

கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று (ஜூன் 21) நடந்து முடிந்த நிலையில், தேர்வு மையத்தின் கழிப்பறையில் ரகசியமாக ஸ்மார்ட்போனை மறைத்து வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட மாணவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தேர்வு நடைமுறையில் உள்ள ஓட்டைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

நடந்தது என்ன?

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்விற்கு, மெட்டல் டிடெக்டர் சோதனை மற்றும் தீவிர உடல் பரிசோதனை எனப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பது வழக்கம். இந்த கெடுபிடிகளில் சிக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு 'ஹைடெக்' திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

தேர்வு தொடங்குவதற்கு காலை 7 மணி வாக்கில் எப்படியோ தேர்வு மையத்திற்குள் நுழைந்த அந்த மாணவர், அங்கிருந்த கழிப்பறை ஒன்றில் தனது ஸ்மார்ட்போனை யாருக்கும் தெரியாமல் ஃபளஷ் டேங்க்கில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு, எந்தப் பொருளும் இல்லாமல் சாதாரண மாணவரைப் போல நுழைவு வாயிலில் வழக்கமான பரிசோதனைகளை முடித்துவிட்டு தேர்வு அறைக்குள் சென்றுள்ளார்.

கழிப்பறையில் நடந்த மோசடி

தேர்வு தொடங்கி வினாத்தாள் வழங்கப்பட்டதும், சிறிது நேரம் கழித்து தனக்கு வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என கண்காணிப்பாளரிடம் அந்த மாணவர் அனுமதி கேட்டுள்ளார். நேராக கழிப்றைக்குள் சென்ற அவர், தான் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த செல்போனை எடுத்து, விடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிக்கியது எப்படி?

மாணவர் நீண்ட நேரமாக தேர்வு மையத்துக்கு வராததை அறிந்து, சந்தேகம் அடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினர், அவர் சென்ற கழிவறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர் கையும் களவுமாகச் சிக்கினார். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் சிக்கியது. உடனடியாக தேர்வு மைய அதிகாரிகள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முறைகேட்டில் ஈடுபட்ட அந்த மாணவரை உடனடியாக கைது செய்து, செல்போனையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

பலத்த பாதுகாப்பையும் மீறி நடந்த இந்தச் சம்பவம், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! சென்னை CIT வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! CIT வெளியிட்ட அறிவிப்பு!
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு: அசல் மார்க் ஷீட் எப்போது?
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு: அசல் மார்க் ஷீட் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
CM Vijay: திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
Bank Holidays: செப்டம்பரில் பாதி நாள் வங்கிகள் இயங்காது - வரிசை கட்டும் பண்டிகைகள், நீளும் விடுமுறை நாட்கள் - முழு லிஸ்ட்
செப்டம்பரில் பாதி நாள் வங்கிகள் இயங்காது - வரிசை கட்டும் பண்டிகைகள், நீளும் விடுமுறை நாட்கள் - முழு லிஸ்ட்
ஜல்லிக்கட்டை தடை செய்ய TVK அரசு திட்டமா.? இதுக்காக தான் சட்டமன்றத்தில் First Look-ஆ- கேள்வி கேட்கும் அதிமுக
ஜல்லிக்கட்டை தடை செய்ய TVK அரசு திட்டமா.? இதுக்காக தான் சட்டமன்றத்தில் First Look-ஆ- கேள்வி கேட்கும் அதிமுக
DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
Ola S1Z: இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?
இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?
Annamalai: டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
Farmers Subsidy : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.15,000.! அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி .? என்னென்ன ஆவணங்கள் தேவை.?
விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.15,000.! அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி .? என்னென்ன ஆவணங்கள் தேவை.?
Embed widget