National Award for Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி; ஜூலை 21 வரை சமர்ப்பிக்கலாம்!
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி; ஜூலை 21 வரை சமர்ப்பிக்கலாம்!
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளையே ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் (National Award for Teachers) விருதும், மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பப் பதிவு ஜூன் 27ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விண்ணப்பிக்க ஜூலை 15ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.
ஜூலை 21-க்குள் அனுப்ப வேண்டும்
விண்ணப்பதாரர்கள் தாங்கள் சுயமாக பூர்த்தி செய்த முழுமையான விண்ணப்பங்களை 2024, ஜூலை 21-க்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என 3 கட்டத் தேர்வு வாயிலாக, 50 ஆசிரியர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தினமான 2024, செப்டம்பர் 5-ம் தேதி, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
முன்னதாக உயர் கல்வி அமைச்சகம் சார்பில் பொறியியல் மற்றும் டிப்ளமோ, கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான விருது அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
* மாநில அரசு, யூனியன் பிரதேசப் பள்ளி ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
* மத்திய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள், ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
* சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
* எனினும் குறைந்தது 10 ஆண்டுகள் அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஒப்பந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் யாரும் டியூஷன் எடுத்துக்கொண்டு இருக்கக் கூடாது.
http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம்