மேலும் அறிய

Naan Mudhalvan:நான் முதல்வன் திட்டம் - போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!

Naan Mudhalvan: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களை காணலாம்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு  முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளுக்குள் (23.06.2024) விண்ணப்பிக்க வேண்டும். 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி மற்றும் வங்கி துறைகளின் போட்டித் தேர்வுகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, அதற்காக தயாராக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு கடந்தாண்டு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2024-2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், மத்திய மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  

இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக “நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை’’ தொடங்க உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இதற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு விவரம்:

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 29 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.08.1995 க்கு முன் பிறந்தவராக இருக்க கூடாது. 

வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும். 

தெரிவு செய்யும் முறை:

இப்பயிற்சிக்கான 1,000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 14.07.2024 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்:

SSC cum ரயில்வே பயிற்சி

Naan Mudhalvan:நான் முதல்வன் திட்டம் - போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!

வங்கி பயிற்சி 

Naan Mudhalvan:நான் முதல்வன் திட்டம் - போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் ரூ.3,000 (refundable Caution Deposit) கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிந்ததும் இது திரும்ப அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக்கு தங்குமிடம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in -என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.06.2024

இது தொடர்பாக சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:

அலைப்பேசி எண்: 9043710214 / 9043710211

மின்னஞ்சல் முகவரி -  nmssc_banking@naanmudhalvan.in 

மேலதிக விவரங்களுக்கு: https://www.naanmudhalvan.tn.gov.in/ 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
Kamal Haasan: இரண்டே காட்சிகள்.. அதிரும் ஒட்டுமொத்த திரையரங்கம்.. கல்கி படத்தில் கமலின் கதாபாத்திரம் எப்படி?
Kamal Haasan: இரண்டே காட்சிகள்.. அதிரும் ஒட்டுமொத்த திரையரங்கம்.. கல்கி படத்தில் கமலின் கதாபாத்திரம் எப்படி?
Embed widget