மேலும் அறிய
Advertisement
“நல்ல மருத்துவ சேவை செய்வதே எனது நோக்கம்” - 7.5% ஒதுக்கீட்டில் 2ஆம் இடம் பிடித்த தருமபுரி மாணவர் பேட்டி
ஏழை, எளிய, உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, நல்ல மருத்துவ சேவை செய்வதே எனது நோக்கம் என மாநில அளவில் 7.5% ஒதுக்கீட்டில் இரண்டாம் இடம் பிடித்த மாணவன் பேட்டி.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாய்க்கனஹள்ளியை சேர்ந்த பச்சையப்பன் என்கிற மாணவன் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தந்தை வெளியூரில் கூலி வேலை செய்துள்ள நிலையில், மன வளர்ச்சி குன்றிய தாய், மாணவன் பச்சையப்பன் உள்ளிட்டோர் தாத்தா பாட்டி மற்றும் மாமாவின் அரவணைப்பில் இருந்து வருகின்றனர். தொடக்கக் கல்வி முதல் அரசுப் பள்ளியில் பயின்று வந்த பச்சையப்பன் பென்னாகரம் அடுத்த மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து, மாமா கிருஷ்ணன் வழிகாட்டுதல் படி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் தற்பொழுது 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில், 565 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவன் பச்சையப்பனை குடும்பத்தினர் இனிப்பு ஊட்டி வாழ்த்தி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் சிறு வயது முதல் தாய் மாமன் அரவணைப்பில் படித்து வந்த பச்சையப்பன், தனது தாய் மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதால், ஐஏஎஸ், எம்பிபிஎஸ் படிக்க வேண்டும். படித்து முடித்த பிறகு மன வளர்ச்சி குன்றியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், போன்றவர்களுக்கு சிறந்த மருத்து சேவை செய்ய வேண்டும் என நோக்கமாக கருதி படித்து வந்தேன். தற்பொழுது மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதால், சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, தன் தாயைப் போன்று மன வளர்ச்சி குன்றியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், வசதி இல்லாத ஏழை எளியவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றுவது எனது நோக்கம். மேலும் தனது படிப்பிற்கு வழி காட்டி, உறுதுணையாக இருந்த தாத்தா, பாட்டி, மாமா அத்தை மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion