மேலும் அறிய

Puthumai Penn Scheme: மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை: புதுமைப் பெண் திட்டத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. விவரம்..

நவம்பர்‌ 1-ஆம் தேதி முதல்‌ நவம்பர்‌ 11-ஆம்‌ தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌ உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவிகளும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். நவம்பர்‌ 1-ஆம் தேதி முதல்‌ நவம்பர்‌ 11-ஆம்‌ தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க முடியும். 

கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். இந்தத் திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் (Puthumai Penn Thittam) என்று பெயர் சூட்டப்பட்டது. புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌ (Puthumai Pen Thittam) உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள், நவம்பர்‌ 1 ஆம் தேதி முதல்‌ நவம்பர்‌ 11 ஆம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்‌.

தமிழ்நாடு முதலமைச்சரால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு/ தொழில்நுட்பப் படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌தோறும்‌ 1000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமைபெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. இதுவரை 2,3 மற்றும்‌ 4ம்‌ ஆண்டில்‌ பயிலும்‌ 1.13 லட்சம்‌ மாணவிகள்‌ இத்திட்டத்தில்‌ உதவித் தொகையை பெற்று பயன்‌ அடைந்துள்ளனர்.

தற்போது http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணைய தளத்தில் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இந்த வலைத்தளத்தில்‌, மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக நவம்பர்‌ 1 ஆம்‌ தேதி முதல்‌ 11 ஆம்‌ தேதி வரை பதிவு செய்யலாம்‌. அரசு பள்ளிகளில்‌ பயின்ற மாணவிகள்‌ மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்‌, மாணவிகள்‌ தங்கள்‌ கல்வி நிறுவனங்கள்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பம்‌ செய்ய வேண்டும்‌. நேரடியாக விண்ணப்பிக்கக்‌ கூடாது.


Puthumai Penn Scheme: மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை: புதுமைப் பெண் திட்டத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. விவரம்..

இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்‌ கல்வி பயிலும்‌ நிறுவனங்களில்‌ நவம்பர்‌ 11 ஆம்‌ தேதி வரை சிறப்பு முகாம்கள்‌ நடைபெறும்‌. 

மாணவிகள்‌ தவறாமல்‌ அவர்களுடைய ஆதார்‌ அட்டை மற்றும்‌ (கல்வி மேலாண்மை தகவல்‌ திட்ட எண்ணுக்காக) எமிஸ், மாற்றுச்‌ சான்றிதழ்‌ ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்‌. மேலும்‌, தற்போது 2,3 மற்றும்‌ 4ம்‌ ஆண்டுகளில்‌ படிக்கும்‌ மாணவிகள்‌, முதற்கட்டத்தில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌, தற்போது விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌, விண்ணப்பம்‌ பூர்த்தி செய்யும்‌ முறையில்‌ மாணவிகளுக்கு சந்தேகங்கள்‌ ஏதும்‌ இருப்பின்‌, சமூக நல இயக்குநராக அலுவலகத்தில்‌ மாநில அளவில்‌ செயல்படும்‌ உதவி மையத்தினை திங்கள்‌ முதல்‌ வெள்ளிவரை, காலை 10 மணி முதல்‌ 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்‌.

தொலைபேசி எண்கள்: 9150056809,9150056805, 9150056801 மற்றும்‌ 9150056610 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌. 

மேலும்‌ mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்‌ அனுப்பலாம்‌.

கடைசித் தேதி என்ன?

மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில்‌ முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ தகுதிவாய்ந்த மாணவிகள்‌ அனைவரும்‌ புதுமைப் பெண் திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கலாம். இதற்கு நவம்பர் 11 கடைசித் தேதி ஆகும். மாணவிகள் 11.11.2022 க்குள்‌ தவறாமல்‌ விண்ணப்பிக்க வேண்டும்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget