மேலும் அறிய

Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

Minister Raj mohan: தமிழகப் பள்ளிகளில் சமூக நீதி, ஏஐ கல்வி; பிரிவினைக்கு இடமில்லை: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன்தலைமையில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில் இன்று பள்ளிக் கல்வித் துறையின் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’இந்த ஆண்டு தேர்ச்சி பெறாத, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு கற்றலை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறோம். மாணவர்களுக்கு ஏஐ, கோடிங், ஏ.ஆர்., பைத்தான், ஜேடூஇ உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஏஐ கோடிங் பயிற்சியை 5 ஆயிரம் பள்ளிகளுக்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதலில் மனநலன்

மாணவர்களின் மன நலனைக் காக்க வேண்டியது எல்லோரின் கூட்டுப் பொறுப்பு. அது போதையின் பாதைக்குச் செல்லாமல் தடுக்க உதவும்.

இரண்டாவது பள்ளி கட்டமைப்பு

பள்ளி வகுப்பறை முதல் கழிப்பறை வரை பிரச்சினை வந்தால் சரிசெய்வதை விட, பிரச்சினையே வராமல் பார்த்துக்கொள்வது இலக்காக உள்ளது.

மூன்றாவது உணவு

மாதிரிப் பள்ளிகள், வெற்றிப் பள்ளிகளில் மாணவர்களின் உணவு குறித்து கவனம் செலுத்த கூறியிருக்கிறோம்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை தேர்ச்சி விகிதம் கூடியிருக்கிறது.   

இதையும் வாசிக்கலாம்: Re NEET 2026: நீட் மறு தேர்வு; மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பை அறிவித்த NTA- கால அவகாசம் நீட்டிப்பு!

போக்குவரத்து நடத்துநர்கள் கனிவாக நடந்துகொள்ளுங்கள்

பள்ளிக்கு மாணவர்கள் வரும்போதும் திரும்பச் செல்லும்போதும் மக்களும் தன்னார்வலர்களும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து நடத்துநர்கள் இன்னும் கொஞ்சம் கனிவாக மாணவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

அறிவியலுக்குப் புறம்பான எந்த விஷயங்களுக்கும் பள்ளியில் இடம் கிடையாது. தன்னம்பிக்கை, அறிவியல், பகுத்தறிவு கொண்ட யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்கிறோம். முன்னாள் மாணவர்களை அம்பாசிடர்களாக அழைக்க உள்ளோம். போதையின் பாதை பள்ளி, கல்லூரிகளை அணுகாதவாறு செயல்படுவோம்.

மதம், சாதி சார்ந்த அடையாளங்களுக்கு நோ!

மதம், சாதி சார்ந்த அடையாளங்களோடு யாருமே பள்ளி வளாகத்துக்குள் வரக்கூடாது. கயிறாக இருந்தால்கூட அனுமதி கிடையாது. இங்கு சமூக நீதிக்கு மட்டுமே இடம். தமிழகப் பள்ளி வளாகங்களில் சமூக நீதி, அறிவியல் மற்றும் அடுத்த தலைமுறையினரின் கல்வி மேம்பாடு ஆகிய மூன்றிற்கு மட்டுமே இடம் உண்டு. பிரிவினையையோ, வேற்றுமையையோ வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை.

நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் அறிக்கையை முழுமையாக அடியாழம் வரை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம். தனியார் பள்ளிகளுக்கு எவ்வித முறைமுகக் கட்டணமும் அரசு தரப்பிலோ, மூன்றாம் தரப்பிடம் இருந்தோ விதிக்கப்படாது. அதனால் பள்ளிகள் தங்களின் கட்டணத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’’.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
Embed widget