மேலும் அறிய

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் வரப்போகும் மாற்றங்கள்; சஸ்பென்ஸ் வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணி மூப்பு அடிப்படையில் நிரப்படும் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் படிப்படியாக செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

விழுப்புரம்: நவம்பர் 13ஆம் தேதிக்கு பிறகு தலைமை ஆசிரியர் பணிக்காக பணி மூப்பு பட்டியல் வரவுள்ளது. பட்டியல் வெளியாகும்போது பள்ளிக்கல்வித்துறை தொடர்பான 30 சதவீத வழக்குகள் முடிவடையும் என விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணி என்பது சாதாரண பணி அல்ல. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் என்ற மல்லர் கம்பத்தில் தினமும் ஏறி, இறங்கும் பணியை தான் செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தை விடவும் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களை அடித்துக் கொள்ள வேறு யாரும் இல்லை. நேற்று வரை 233 தொகுதிகளிலும் ஆய்வு செய்துள்ளேன். எந்த தொகுதிக்கு சென்றாலும் ஆய்வுக்கு பின்னர் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டு ஆய்வு குறித்து தெரிவிப்பேன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எடப்பாடி தொகுதிக்கு சென்று ஆய்வு செய்தேன் பிறகு எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆய்வு குறித்து தெரிவித்தேன்.

ஆசிரியர்களின் மகிழ்ச்சியே அரசின் மகிழ்ச்சி என இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதனை மறக்கவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம் என முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார். நமக்கான தலைமை ஆசிரியர் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆண்டு முதல் நமக்கு உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் வந்துள்ளார் அவர்தான் உதயநிதி ஸ்டாலின். நான் உங்களின் வகுப்பு ஆசிரியர். என் பணி என்பது நீங்கள் என்னவெல்லாம் கேட்கிறீர்களோ அதனை முதல்வரிடம் கொண்டு சென்று அதனை வாங்கித் தரும் பணியைத்தான் செய்து வருகிறேன். கண்டிப்பாக நான் அதனை செய்வேன். 

கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் செய்த தவறுகளை சீர் செய்வதற்கு எங்களுக்கு மூன்றாண்டு காலம் ஆகியுள்ளது

கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் செய்த தவறுகளை சீர் செய்வதற்கு எங்களுக்கு மூன்றாண்டு காலம் ஆகியுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. திட்டங்களை மற்ற மாநிலங்களும் பாராட்ட காரணம்  முதல்வரும், ஆசிரியர்கள் தான் காரணம். அடுத்த இரண்டு ஆண்டு மட்டும் திமுக ஆட்சி இல்லை, ஏழாவது முறையாக, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கும் திமுக தான் ஆட்சியில் இருக்கும். ஒரே கையெழுத்தில் ஒரு லட்சம் வரை பணியில் இருந்து நீக்கி அவர்கள் யார் என்பதையும், ஒரே கையெழுத்தில் அரை லட்சம் பேரை பணியில் சேர்த்தவர்கள் யார் என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆசிரியர்களோடு சேர்ந்து இந்த சமூகத்தை உயர்த்த நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். என உரையாற்றினார்.

மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்:

தமிழக முதல்வரின் தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக முதலமைச்சரிடம் நாங்கள் அளித்த விளக்கம் 2500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளோம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தலைமையாசிரியர் தேர்வில் டெட் தேர்வில் முறையில் தேர்வு செய்யப்படுமா அல்லது பணி மூப்பு  அடிப்படையில் தேர்வு செய்யப்படுமா என்கிற கேள்விக்கு, அரசாங்கத்தை பொருத்தவரை பணி மூப்பு அடிப்படையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதம் செய்துள்ளோம். ஆனால் இது தொடர்பான பட்டியல் முழுமை அடையவில்லை.

இது தொடர்பான பட்டியல் நவம்பர் 13ஆம் தேதிக்கு பிறகு பட்டியல் வரவுள்ளது. அது தொடர்பான பட்டியல் வெளியாகும் போது பள்ளிக்கல்வி தொடர்பான 30 சதவீத வழக்குகள் முடிவடையும். பகுதி நேர ஆசிரியர்களை பணிமியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணி நிரந்தரம் படிப்படியாக செய்யப்படும், நிதி நெருக்கடியில் 2500 ரூபாய் கூடுதலாக  வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக பகுதி நேர ஆசிரியர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS”  விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்  முதல்வர் வேட்பாளர் யார்?
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் முதல்வர் வேட்பாளர் யார்?
Gautam Gambhir :  இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
Gautam Gambhir : இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
”திமுக-விற்கு செல்கிறாரா நா.த.க.காளியம்மாள்?” என் குரலாக நானே ஒலிப்பேன் என அறிவிப்பு..!
”திமுக-விற்கு செல்கிறாரா நா.த.க.காளியம்மாள்?” என் குரலாக நானே ஒலிப்பேன் என அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS ADMK Alliance | ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!முதல்வர் வேட்பாளர் யார்?Delhi Ganesh | IND-PAK போரால் சினிமா ENTRY! விமானப்படையில் 10 ஆண்டுகள்! டெல்லி கணேஷ்-ன் சுவாரஸ்ய கதைSalem Doctor fight | Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS”  விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்  முதல்வர் வேட்பாளர் யார்?
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் முதல்வர் வேட்பாளர் யார்?
Gautam Gambhir :  இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
Gautam Gambhir : இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
”திமுக-விற்கு செல்கிறாரா நா.த.க.காளியம்மாள்?” என் குரலாக நானே ஒலிப்பேன் என அறிவிப்பு..!
”திமுக-விற்கு செல்கிறாரா நா.த.க.காளியம்மாள்?” என் குரலாக நானே ஒலிப்பேன் என அறிவிப்பு..!
”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
Kamal Haasan:
Kamal Haasan: "உலகநாயகன், ஆண்டவர் பட்டம் வேண்டாம்" அஜித் வழியில் கமல் - ரசிகர்கள் ஷாக்
Sanju Samson :
Sanju Samson : "நேற்று ஹீரோ, இன்று ஜீரோ" சஞ்சு சாம்சன் பெயரில் இப்படி ஒரு சாதனையா!
Breaking News LIVE 11th NOV : கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் : கமல்ஹாசன்
Breaking News LIVE 11th NOV : கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் : கமல்ஹாசன்
Embed widget