மேலும் அறிய

''பள்ளிகளில் பிற்போக்குத்தனம்'' கணினி அறிவியலை தனி பாடமாக்கி கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக்க வலியுறுத்தல்

கணினி அறிவியலை தனிப்பாடமாக்க தமிழக அரசு மறுத்து வருவது மிகவும் பிற்போக்கான செயலாகும்.

கணினி அறிவியலை தனி பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவித்து, அதற்கான பயிற்றுனர் பொறுப்பில் கணினி அறிவியல் பட்டத்துடன் கல்வியியல் பட்டமும் பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கணினி அறிவியல் பட்டதாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. கணினி அறிவியலை தனிப்பாடமாக்க தமிழக அரசு மறுத்து வருவது மிகவும் பிற்போக்கான செயலாகும்.

கைவிடப்பட்ட தனிப்பாடத் திட்டம்

கணினி அறிவியலை தனிப்பாடமாக்க வேண்டும் என்பது புதிய கோரிக்கை அல்ல. 2006-11 திமுக ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி  6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் தனிப்பாடமாக்கப்பட்டு, அதற்கான பாடநூல்கள் அச்சிடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது கணினி அறிவியலை தனிப்பாடமாக்கும் திட்டம் கைவிடப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் இப்போதும் கணினி அறிவியல் கற்றுத் தரப்படுகிறது. ஆனால், அது தனிப்பாடமாக அல்லாமல் இணைப் பாடமாக கற்றுத்தரப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை.  மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்தியாலா பள்ளிகளில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலின் நவீன வடிவமான செயற்கை அறிவுத்திறன் தனிப்பாடம் ஆக்கப்பட்டுள்ளது. இன்றைய இணைய உலகில் கணினி அறிவியல் அனைத்துத் துறைகளுடனும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதை தனிப்பாடமாக கற்பிக்க தமிழக அரசு மறுப்பதை ஏற்க முடியாது.

தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

தமிழ்நாட்டில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணினி அறிவியலுடன் கல்வியல் பட்டமும் பெற்று வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.  அவர்களுக்கு வேலைவழங்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணினி அறிவியலை கற்பிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

இத்திட்டத்தின்படி, ஹை டெக் ஆய்வகம் எனப்படும் கணினி ஆய்வகம் அமைக்க பள்ளி ஒன்றுக்கு 6.40 லட்ச ரூபாய், கணினி ஆசிரியர்களை நியமித்து ஊதியம் வழங்க  ஒருவருக்கு ஆண்டுக்கு 1.80 லட்ச ரூபாய்  வீதம் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.

மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 6,454 பேர், நடுநிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 8,209 பேர் என மொத்தம் 14,663 கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நிதியை பெற்றுள்ள தமிழக அரசு, அந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. கணினி ஆய்வக பயிற்றுனர்களாக கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தில் பணியாற்றியவர்களில் 8200 பேரைத் தேர்வு செய்து தமிழக அரசு நியமித்துள்ளது. இது மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது.

ஹைடெக் ஆய்வக பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை அந்தப் பணியில் ஈடுபடுத்தாமல் எமிஸ் (Educational Management Information System - EMIS) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். அதனால், உயர் ஆய்வுக் கூடங்கள் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டனவோ, அந்த நோக்கமே சிதைந்து விட்டது.

எனவே, உயர் ஆய்வுக் கூடங்களின் பயிற்றுனர்களாக  கணினி அறிவியல் பட்டத்துடன், பிஎட் பட்டமும் படித்து வேலைவாய்ப்பின்றி வாடும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனி பாடமாக கொண்டு வர வேண்டும்; அவற்றுக்கு தனி பாட வேளைகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’. 

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

ALSO READ | Kanguva Review in Tamil: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!
தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!
MDS கனவா? புதுச்சேரி கல்லூரிகளில் சேர CENTAC விண்ணப்பங்கள் தொடக்கம்!
MDS கனவா? புதுச்சேரி கல்லூரிகளில் சேர CENTAC விண்ணப்பங்கள் தொடக்கம்!
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
Arappor iyakkam : தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
Embed widget