மேலும் அறிய

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

இரண்டு ஆண்டுகளில் 512 நூல்களை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் மாணவர்கள் வாசித்துள்ளனர்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களின் மாபெரும் வாசிப்புத் திருவிழா.

நான்கு நூல்கள் வெளியீடு
 
புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கியக் கூடுகையில் பெரும்பாலான எழுத்தாளர்களும், தமிழறிஞர்களும் முன் வைக்கும்  கருத்து இன்றைய தலைமுறையினருக்குப் வாசிப்புப் பயிற்சி இல்லை என்பதாகும். இக்குறையினை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி  மாணவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றி வருவது பாராட்டிற்குரியது.
மன்னர் கல்லூரியின் மாணவர்களால் திறனாய்வு, தனிமனித வரலாறு, சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்களென நான்கு நூல்கள் கடந்த 10.07.2026 அன்று வெளியிடப்பட்டன. 
 
வாசிப்பு முற்றம்:
 
தமிழ் உயராய்வு மைய உதவிப்பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி, பொதுத்தமிழ் படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் போது, ‘வாசிப்பு முற்றம்’ எனும் தலைப்பில், தினந்தோறும் 10 நிமிடங்கள் ஒரு நூலை வாசித்து அதனைத் திறனாய்வு செய்ய வழிகாட்டுகிறார். அதன்படி ஒரு மாணவரை முன்குறித்து அவர் விரும்பிய நூல் ஒன்றினை எடுத்து வாசித்து வரச் சொல்லி, அந்நூல் பற்றி வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் கவனிக்கும்படி திறனாய்வு செய்கின்றனர். இவ்வாறு தினந்தோறும் செய்து வருவதால், மாணவர்களுக்கு மேடைப்பயம் மற்றும் கூச்சம் விலகுகின்றது. அது மட்டுமின்றி, வாசிப்புப் பழக்கமும் வளர்ந்து கொண்டே வருகின்றது.
 
நூல் வெளியீட்டுத் திட்டம்:
 
வாசிப்புப் பயிற்சியை மட்டும் அளிக்காமல், தொடர்ந்து மாணவர்கள் திறனாய்வு செய்து எழுதிய குறிப்புகளைச் செம்மையாக்கி அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு வருகிறார் முனைவர் சே.முனியசாமி. இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளில் 262 நூல்கள் மாணவர்களால் திறனாய்வு செய்யப்பட்டு ஆறு நூல்களாக வெளிவந்துள்ளன. இதில் அறிவுக்கு வெளிச்சம், வாசிப்புத் திருவிழா, வாசிப்புச் சுற்றுலா, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்கள் (1969-2025) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் 250 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இப்பயிற்சி  மாணவர்களை இளம் படைப்பாளர்களாக உருவாக்கியுள்ளது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் மாணவி ச.கார்த்தி செல்வியின்  ‘பெண் பிள்ளை’ சிறுகதைத் தொகுப்பு, மாணவி அ.லாவண்யா  மொழிபெயர்த்த ‘போர்க் கலை’ ஆகிய நூல்கள் விளங்கும்.
 
மாணவர்கள் 512 நூல்களை  எடுத்து வாசித்துள்ளனர்.
 
இதுவரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின்  வணிக நிர்வாகவியல், வணிகவியல், பொருளியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் 512 நூல்களை  எடுத்து வாசித்துள்ளனர். இன்றைய மாணவர்களின்  வாசிப்புப் பழக்கம் மேம்பட்டுள்ளது என்பதற்கு இந்நூல்களே  சான்றுகளாகும். இந்த வாசிப்பு முற்றத்திற்கும், நூல் வெளியீட்டுத் திட்டத்திற்கும் கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை நல்கி நிதி உதவியும் அளித்து வருவது கூடுதல் சிறப்பாகும். 10.7.2026 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா மன்னர் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கு.சாமிதுரை அவர்களும், புனித அருளானந்தர் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ச.வின்சென்ட் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் உயராய்வு மையப் பேராசிரியர்கள் அனைவரும் விழா ஏற்பாட்டினைகச் செய்திருந்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget