மேலும் அறிய

LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

LIC scholarships 2024: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும்உயர்கல்வி உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

மருத்துவம், பொறியியல், பட்டப் படிப்பு என அனைத்து துறை மாணவர்களுக்கும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக எல்ஐசி அறிவித்துள்ளது. எல்ஐசி பொன்விழா கல்வி உதவித் தொகை திட்டம் 2024-ன் கீழ், மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சிஜிபிஏ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024-25 கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல், அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பில் முதல் ஆண்டு இணைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

அதேபோல், தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், 10-ம் வகுப்பு முடித்து 11, 12-ம் வகுப்பு, 2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 2021- 22/ 2022-23/ 2023-24 கல்வியாண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவில் அனைத்து மாணவர்களுக்கும் படித்து முடிக்கும் வரை உதவித்தொகை அளிக்கப்படும். சிறப்புப் பிரிவில் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகை எவ்வளவு?

மருத்துவம் சார் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரமும் பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும் பிற படிப்புகளுக்கு, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும். எனினும் உதவித்தொகையைப் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

சிபிஎஸ்இ அல்லது பிற கிரேடிங் முறையில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சதவீதத்துக்கு மாற்றி விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், https://gjss.licindia.in/GJSS/?_ga=2.42593701.1805045280.1734328831-1027680808.1732013367 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் எல்ஐசி நிறுவனம் கேட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில்களை நிரப்ப வேண்டும்.
  • ஒரு கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால்கூட, விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் படாது.
  • ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க டிசம்பர் 22-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
  • உதவித்தொகை குறித்த விரிவான தகவல்களை https://licindia.in/documents/d/guest/golden-jubilee-scholarship-scheme-2024 என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://licindia.in 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
Embed widget