மேலும் அறிய

5 முக்கிய திட்டங்கள், 7 பிரிவுகள், 2.57 லட்சம் மாணவர்கள் பயன்- அதென்ன ’’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’’ நிகழ்வு?

2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப்பெண் தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்கவிழா இன்று (25.9.2025) மாலை சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் 2025-26 கல்வியாண்டிற்கான 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (25.9.2025) மாலை நடக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்கிற திட்டத்தின்கீழும், மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' என்கிற திட்டத்தின்கீழும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப்பெண் தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்கவிழா இன்று (25.9.2025) மாலை சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியை 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப்பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்களும் திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இவ்விழாவில்  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமாக இவ்விழா மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.

7 பகுதிகள்

கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து "நான் முதல்வன்", "விளையாட்டுச் சாதனையாளர்கள்", "புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்" மற்றும் "அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்" ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.

இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

இதன் பிறகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் தெலங்கானா முதலமைச்சரும் இணைந்து 2025-26-ஆண்டிற்கான "புதுமைப்பெண்- தமிழ்ப் புதல்வன்" திட்டங்களைத் தொடங்கி வைப்பார்கள். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
MG Motor NEV Architecture: டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
Best Speed for Car Mileage: ‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Embed widget