மேலும் அறிய

Kalai Thiruvizha: 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா; ஆக.22 தொடக்கம்

1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா ஆக.22ஆம் தேதி பள்ளி அளவில் தொடங்குகிறது.

6 முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து மாணவர்களின்‌ கலைத்‌திறனை வெவளிப்படுத்தும்‌ வகையில்‌ கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம்‌, மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்திருவிழா நடைபெற்று வந்தது.

அதனைத்‌ தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களும்‌ பங்கேற்கும்‌ வகையில்‌ கலைத்திருவிழா நடத்தப்படும்‌ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இதன்படி, தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின்‌ கலைத்‌ திறன்களை வெளிக்கொணரும்‌ விதமாக, அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள்‌ கலை அரங்க செயல்பாடுகள் மூலம்‌ வழங்கப்பட்டு, 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்‌ சான்றிதழ்களும்‌ வழங்கப்பட்டன.

மாநில அளவில்‌ கலையரசன்‌, கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால்‌ விருதுகளும்‌ சான்நிதழ்களும்‌ வழங்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கலைத்திருவிழா விரிவுபடுத்தப்பட்டது. 2024-25 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ தனித்தனியே கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கலைத்திருவிழா 2024-25

கடந்த ஆண்டு இக்கலைத்திருவிழா போட்டிகள்‌ "சங்கமிப்போம்‌ சமத்துவம்‌படைப்போம்‌" என்ற மையக்கருத்தின்‌ அடிப்படையில்‌ நடைபெற்றது. அதுபோன்று இவ்வாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்‌, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்‌ வளப்படுத்துதல்‌ சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ நோக்கத்துடன்‌ "சூழல்‌ பாதுகாப்பு அனைவரின்‌ பொறுப்பு" என்ற மையக்கருத்தின்‌ அடிப்படையில்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கலைத்திருவிழா 2024-25 - பிரிவுகள்‌

2024-25 ஆம்‌ ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்‌ பின்வருமாறு ஐந்து பிரிவுகளில்‌ நடைபெறும்‌.

பிரிவு 1-  1 மற்றும்‌ 2 ஆம்‌ வகுப்பு
பிரிவு 2 - 3 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை
பிரிவு 3 - 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை
பிரிவு  4 - 9 மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்பு
பிரிவு 5 - 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு

ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது பங்குபெறச் செய்ய வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. வெற்றி பெற்றவர்களின் விவரங்களை செப்.3-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

கலைத் திருவிழா குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைக் காண:

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget