மேலும் அறிய

JEE Main Admit Card: ஜேஇஇ மெயின் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி?

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு 2ஆவது அமர்வுக்கான ஹால்டிக்கெட் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு 2ஆவது அமர்வுக்கான ஹால்டிக்கெட் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.

அதன்படி, நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 8.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 8.22 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். முதல் அமர்வுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தில் வெளியாகின. 2ஆவது அமர்வுக்கான தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தேர்வை எழுத 9.4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக இந்தியா முழுவதும் 330 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 15 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹால் டிக்கெட் வெளியீடு

ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இதை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதைத் தேர்வர்கள் டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* தேர்வர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, 3 வெவ்வேறு இணையதள முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளன.

* இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://jeemain.nta.nic.in/  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

* இதில் உள்ள 3 முகவரிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வர்கள் க்ளிக் செய்ய வேண்டும். அதில் தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.

* அதில் தோன்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  

ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு  கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு விவரங்களைக் காண: https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2023/04/2023040335.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

தொலைபேசி எண்: 011-40759000 

இ- மெயில் முகவரி: jeemain@nta.nic.in

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு மையங்கள் குறித்து அறிய https://examinationservices.nic.in/JEEMain23/Registration/Instruction.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Pezeshkian Vs America: “உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
“உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Sorento Vs Fortuner Diesel: டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
Victoris CNG on EMI: சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
Embed widget