மேலும் அறிய

அடடே.. அரசு பொறியியல் கல்லூரிகளில் அறிமுகமாகும் புது வசதி; அமைச்சர் அசத்தல் அறிவிப்பு

 செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ எந்திரனியல்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌, மாணாக்கர்களின்‌ திறமைகளை வளர்ப்பதிலும்‌, திறமையான மனிதவளத்தினை உருவாக்குவதிலும்‌ முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர் கல்வித்துறையின்‌ மூலம்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு பகுதிகளில்‌ உள்ள 11 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ புதிய நவீன ஆய்வகங்களை அமைக்க ரூ.12.38 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர்‌ கோவி.செழியன்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறி உள்ளதாவது:

’’கடந்த 2024-2025 ஆம்‌ ஆண்டின்‌ உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில்‌ அறிவிக்கப்பட்டஅறிவிப்புகளின்படி மாநிலத்தில்‌ உள்ள 11 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ புதிய நவீன ஆய்வகங்களை அமைக்க தற்போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ நிதிஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்‌.

இணைய ஆய்வகம்‌

மாணாக்கர்கள்‌, பொருட்களின்‌ இணைய பயன்பாடுகள்‌ மற்றும்‌ பிற மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட அமைப்பு அடிப்படையிலான திட்டத்தை உருவாக்க காரைக்குடி மற்றும்‌ போடிநாயக்கனூர்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள 2 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ பொருட்களின்‌ இணைய ஆய்வகம்‌ (IOT Library) அமைக்க தலா ரூ.92,10,000 வீதம்‌ மொத்தம்‌ ரூ.1,84,20,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 வேலூர்‌, தஞ்சாவூர்‌ மற்றும்‌ திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில்‌ உள்ள 3 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ பொருள்சேர்‌ உற்பத்தி ஆய்வகம்‌ அமைக்க தலா ரூ.1,16,00,000 வீதம்‌, மொத்தம்‌ ரூ.3,48,00,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையம்‌ தொழில்துறை, அரசு மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டை ஒருங்கிணைத்து நிலையான தயாரிப்புகளுக்கான மேம்பாடு, குறைந்த செலவில்‌ அதிக உற்பத்தித்திறனைக்‌ கொண்டிருப்பது, தொடர்புடைய கல்வி மற்றும்‌ பயிற்சியை ஆதரிப்பது மற்றும்‌ பல நோக்கங்களைக்‌ கொண்டுள்ளதாகும்‌.

 செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ எந்திரனியல்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌, மாணாக்கர்களின்‌ திறமைகளை வளர்ப்பதிலும்‌, திறமையான மனிதவளத்தினை உருவாக்குவதிலும்‌ முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கோயம்புத்தூர்‌, சேலம்‌ மற்றும்‌ பர்கூர்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள 3 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ எந்திரனியல்‌ ஆய்வகம்‌ அமைக்க தலா ரூ.1,31,87.975 வீதம்‌ மொத்தம்‌ ரூ.3,95,63,926 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதற்காக இந்த ஆய்வகங்கள்?

இந்த ஆய்வகம்‌, மாணாக்கர்களுக்கு பலவிதமான பயிற்சி திட்டங்கள்‌, பட்டறைகள்‌ மற்றும்‌ படிப்புகளை வழங்கும்‌. மின்சார வாகன வடிவமைப்பு மற்றும்‌ மேம்பாடு, மோட்டார்‌ மற்றும்‌ மோட்டார்‌ கட்டுப்பாடு, மின்சார வாகன மின்கலன்கள்‌ மற்றும்‌ மின்கல மேலாண்மை அமைப்புகள்‌, மின்னேற்றி, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள்‌, பொருட்களின்‌ இணையம்‌ மற்றும்‌ தானியங்கி வாகன மின்னணுவியல்‌ ஆகியவற்றில்‌ ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டை துரிதப்படுத்த, திருநெல்வேலி, தருமபுரி மற்றும்‌ ஈரோடு ஆகிய இடங்களில்‌ உள்ள 3 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம்‌ அமைக்க தலா ரூ.1,03,33,910 வீதம்‌, மொத்தம்‌ ரூ.3,10.01,730 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

இதன்மூலம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 11 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ அப்பகுதியில்‌ உள்ள மாணவர்களின்‌ தேவையினை பூர்த்தி செய்ய இந்த புதிய நவீன ஆய்வகங்கள்‌ அமையும்‌ என்பதில்‌ ஐய்யமில்லை. இவற்றை அமைக்க மொத்தம்‌ ரூ.12.38 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள்‌ வெளியிட்டுள்ளது’’.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர்‌ தெரிவித்துள்ளார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Renault Kwid Facelift: மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
Embed widget