மேலும் அறிய

வேதனை! மக்கள் தொகை வளர்ச்சியை மிஞ்சிய மாணவர்கள் தற்கொலை விகிதம் - தமிழ்நாட்டில் என்ன நிலை?

இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியை காட்டிலும் மாணவர்கள் தற்கொலை வளர்ச்சி விகிதம் அதிகளவு இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தயாரித்துள்ள இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகி நாட்டு மக்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புள்ளி விவரங்கள் மிகவும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

மாணவர்கள் தற்கொலை விகிதம் அதிகரிப்பு: 

அதாவது, கடந்த இரண்டு தசாப்தங்களாக ( அதாவது 20 வருடங்களாக) மாணவர்களின் தற்கொலை விகிதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த 2022ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 53 சதவீதம் பேர்  ஆண்கள்.

2021-2022ம் ஆண்டு புள்ளிவிவரப்படி மாணவர்கள் தற்கொலை 6 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அந்த காலகட்டத்தில் மாணவிகளின் தற்கொலை  விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாக சமூகத்திற்கு அமைந்துள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியை விட அதிகம்:

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விகிதமானது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் ஒட்டுமொத்த தற்கொலை விகிதத்தை காட்டிலும் அதிகளவாக உள்ளது. 0-24 வயதுடையவர்களின் மக்கள் தொகை 582 மில்லியனில் இருந்து 581 மில்லியனாக குறைந்துள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 654ல் இருந்து 13 ஆயிரத்து 044 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகளவு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. தென்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் 29 சதவீத மாணவர்கள் தற்கொலைகள் அரங்கேறியதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வேதனை:

தேசிய ஆவண குற்றக் காப்பகம் காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளின் அடிப்படையில் இந்த புள்ளி விவரத்தை தயார் செய்துள்ளனர். நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகளவு திட்டங்களை ஆண்டுதோறும் செயல்படுத்தி வந்தாலும், மாணவர்கள் கடுமையான மன அழுத்தம், சுமை உள்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

மாணவர்களுக்கு படிக்கும்போதே மன தைரியத்தை அதிகரிக்க ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்படுவதும், எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget