Students Suicide: அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை; நடவடிக்கை என்ன? - அமைச்சர் அன்பில் பதில்
இதை தொலைபேசியில் நாம் பேசினால் நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள் இப்போது துறையின் சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்.
பள்ளி மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறதே, இதைத் தடுப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:
’’வருகிற 27ஆம் தேதி நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் கூட்டம் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, RDS case scheme மூலமாக கல்வி என்று வரும்போது 413 blocks இருக்கிறது. ஒவ்வொரு blocks-க்கும் இரண்டு மருத்துவர்கள் இருக்கிறார்கள். மனநல counselling எப்படி கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்து வருகிறோம்.
கிட்டத்தட்ட 800 மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு மருத்துவர்கள் அங்கே இருக்கின்ற ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கே உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது ஆகியவற்றைச் செய்வர். அதற்கான நிகழ்ச்சியை நம்முடைய முதலமைச்சர் வருகிற 27ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கிறார்.
அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு ஏற்கனவே மனரீதியாக மன அழுத்தம் இருக்கின்றது, ஏதாவது ஒன்றை நண்பனிடம் சொல்ல முடியவில்லை. ஆசிரியரிடம் சொல்ல முடியவில்லை. பெற்றோரிடம் சொல்லமுடியவில்லை. அப்படியிருப்பவர்கள் எப்படி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியும் என்பதற்காகத் தான், “மாணவர் மனசு” என்று ஒரு பெட்டியை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் வைத்து, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை அது
திறக்கப்படும் என்று நாம் சொல்லியிருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல், 14417 எண்ணாக இருந்தாலும் சரி, 1098 ஆக இருந்தாலும் சரி, அந்த மாணவச் செல்வங்களுக்கு இந்த எண்ணை ஒவ்வொரு வகுப்பறையிலும் POCSO issue வரும்போது அதை நாங்கள் ஒட்டி வைத்திருக்கின்றோம்.
அதையும் பேசுவதற்கு அவர்கள் சங்கடப்படுகிறார்கள், தயங்குகிறார்கள், இதை தொலைபேசியில் நாம் பேசினால் நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள் இப்போது துறையின் சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம். அதை website மூலமாக, அந்தக் குழந்தைகள் உள்ளே சென்று தங்களைப் பற்றி சொல்லலாம், சொல்லாமலும் கூட அவர்கள், என்ன பிரச்சனை அந்தப் பள்ளியில் நடக்கிறது என்பதை பதிவு செய்யலாம், அலலது சுற்றுவட்டார சமூகத்தில் என்ன பிரச்சனைகள் வருகிறது என்று சொல்லலாம்.
கண்டிப்பாக அது ஒரு accountability ஆக வரும்போது, அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண்கின்ற பணியில் அதற்கான portalலையும் மிக விரைவில் நாங்கள் வெளியிட இருக்கின்றோம்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஏற்கெனவே உள்ள நடமாடும் ஆலோசனை மையம் தற்போது செயல்படுகின்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அவர், ''ஏற்கனவே 17 பேர் இருந்தார்கள், இப்போது பலர் பணி ஓய்வில் சென்று விட்டதால், தற்போது 7 பேர் மட்டுமே இருக்கின்றார்கள். ஆகவே, அந்த 7 பேர் என்பது கண்டிப்பாக போதாது.
38,000 அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. எல்லாப் பள்ளிகளும் சேர்த்து மொத்தம் 58,000 பள்ளிகள் இருக்கின்றன. அதற்காகத்தான் நான் சொன்னது போல, ஒவ்வொரு ஒன்றியத்திறகும் 413 கல்வி ஒன்றியம் வைத்திருக்கிறோம் என்று சொன்னால், அதில் நம்முடைய RDS Case scheme மூலமாக இரண்டு மருத்துவர்கள் இருப்பார்கள். கிட்டத்தட்ட 600 மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் இதற்கு பயன்படுத்த இருக்கிறோம்'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்