மேலும் அறிய

UGC Announcement : அதிகரிக்கும் கொரோனா: பிஎச்.டி., Mphil.. தேர்வுகள் பற்றி யுஜிசி அறிவிப்பு

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பிஎச்.டி., எம்.ஃபில். வாய்மொழித் தேர்வை காணொலி கருத்தரங்கு மூலம் நடத்திக்கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிஎச்.டி., எம்.ஃபில். வாய்மொழித் தேர்வை காணொலி கருத்தரங்கு மூலம் நடத்திக்கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3,275 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தற்போதைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,719 ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,  கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளால் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 1.5 கோடி மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இறப்புகள் தென் கிழக்கு ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டிருக்கின்றன. 

இதற்கிடையே சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு  பிஎச்.டி., எம்.ஃபில். வாய்மொழித் தேர்வை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்திக்கொள்ள யுஜிசி அனுமதி அளித்துள்ளது. 

இதுகுறித்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''முன்னதாக கொரோனா தொற்று ஊரடங்குக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி கால அட்டவணை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது. அப்போது, பிஎச்.டி., எம்.ஃபில். ஆகிய படிப்புகளுக்கான வாய்மொழித் தேர்வை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்திக்கொள்ளலாம். இவற்றை இணையம் மூலம் கூகுள், ஸ்கைப், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளின் மூலம் நடத்தலாம். 


UGC Announcement : அதிகரிக்கும் கொரோனா: பிஎச்.டி., Mphil.. தேர்வுகள் பற்றி யுஜிசி அறிவிப்பு

எனினும் இணையம் மூலம் இத்தகைய தேர்வுகளை நடத்தும்போது, அனைத்துத் தரப்பினரும் அந்த இணைப்பைப் பார்க்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது, ஆய்வு ஆலோசனைக் குழு, துறை சார் ஆசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள், ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் வாய்மொழித் தேர்வைக் காணும் வகையில் இணைய இணைப்பு இருக்கவேண்டும் என்று யுஜிசி தெரிவித்திருந்தது. 

கடந்த பிப்ரவரி மாதம் யுஜிசி வெளியிட்ட சுற்றறிக்கையில் உயர் கல்வி நிறுவனங்கள் வளாகங்களைத் திறந்து செயல்படலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி, தேர்வுகளை வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பிஎச்.டி., எம்.ஃபில். வாய்மொழித் தேர்வை கூகுள், ஸ்கைப், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளின் உதவியோடு காணொலிக் கருத்தரங்கு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடத்திக்கொள்ளலாம்''. 

இவ்வாறு  பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
கல்விக்கடன் மூலம் கனவு படிப்பை தொடரலாம்: குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் எவை? முழு விபரம் இதோ!
கல்விக்கடன் மூலம் கனவு படிப்பை தொடரலாம்: குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் எவை? முழு விபரம் இதோ!

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்.. சென்னை? தமிழக வானிலை
இடி, மின்னலுடன் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்.. சென்னை? தமிழக வானிலை
PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
PM Modi at G7: அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
Trump Warns Iran: “ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
“ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Embed widget