மேலும் அறிய

Greenfield Universities: தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்களுக்கு அரசு ஒப்புதல்; முழு விவரம்..

தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் (Greenfield universities) அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் (Greenfield universities) அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

பி.எட். கலந்தாய்வை சென்னையில் நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ’’பி.எட். கலந்தாய்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கைக்கான அனுமதிக்கப்படுவார்கள். அக்டோபர் 12 முதல் 17ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும். 7 பி.எட். அரசுக் கல்லூரிகள் மற்றும் 14 பி.எட். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.  அடுத்த ஆண்டு முதல் பி.எட். கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். 

கடந்த காலங்களில் எம்ஃபில் முடித்தவர்கள் கூட துணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் விளைவாக, தகுதி குறைவான கவுரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. யுஜிசி விதிமுறைகளின்படி நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரிகளில் துணை பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். அல்லது அவர்கள் பிஎச்டி முடித்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த  அமைச்சர் பொன்முடி, ''தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் (Greenfield universities) அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

100 ஏக்கர் நிலம், 50 கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ள அமைப்புகளோ அறக்கட்டளைகளோ பசுமை பல்கலைக்கழகம் அமைக்க, தமிழக அரசிடம் விண்ணப்பிக்கலாம். அதன்படி பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு சார்பில் 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 6 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்று பொன்முடி தெரிவித்துள்ளார். 

பசுமை பல்கலைக்கழகம் என்றால் என்ன?

பசுமை பல்கலைக்கழகம் என்பது தனியார் பல்கலைக்கழகங்களில் ஒரு வகை ஆகும். தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019-இன் கீழ் இந்த பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளன.

பசுமை பல்கலைக்கழகங்கள், தங்களுக்குத் தேவையான பாடப் பிரிவுகளை உருவாக்கி, அவற்றுக்கான கட்டணத்தைத் தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம். தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப, மாணவர் சேர்க்கையையும் நடத்திக் கொள்ளலாம்.

மாநிலத்தின் முதல் பசுமை பல்கலைக்கழகமாக, சென்னையில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இதன்கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தப்பட்டு, மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதி பெற்ற 6 பல்கலைக்கழகங்களில் சவீதா பல்கலைக்கழகம் மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் வாசிக்கலாம்: Kendriya Vidyalaya Admission: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்; முழு விவரம்

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget