மேலும் அறிய

JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முறைகேடு புகார்கள்: 2 மாணவர்களின் மதிப்பெண்களில் மட்டுமே முரண்பாடு என ஐஐடி ரூர்க்கி விளக்கம்!

ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஐஐடி ரூர்கி முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், வெறும் இரண்டு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களில் மட்டுமே பெரிய அளவிலான முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐஐடி ரூர்க்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஐஐடி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என இரண்டு தாள்கள் உள்ளன.

மதிப்பெண்களில் முரண்பாடா?

மாணவர்கள் இந்த இரண்டு தேர்வுகளையும் ஒரே நாளில் கட்டாயம் எழுத வேண்டும். இந்நிலையில், தேர்வில் சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஒரு தேர்வில் அதிக மதிப்பெண்களும், மற்றொரு தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களும் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி இந்தப் புகார்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்து ஐஐடி ரூர்கி விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டது. ஒவ்வொரு மாணவரும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ஆகிய இரண்டு தாள்களிலும் பெற்ற மதிப்பெண்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் உன்னிப்பாக ஆராயப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில், ஒட்டுமொத்தமாகத் தேர்வு எழுதிய மாணவர்களில் வெறும் இரண்டு பேரின் மதிப்பெண்களில் மட்டுமே இயல்புக்கு மாறான பெருமளவிலான வித்தியாசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த இரண்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஒரு தாளில் மிக அதிக மதிப்பெண்களையும், மற்றொரு தாளில் மிகக் குறைவான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். மற்ற அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களும் இரண்டு தாள்களிலும் இயல்பான மற்றும் சீரான விகிதத்திலேயே அமைந்துள்ளன என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பரவலாக முறைகேடுகளோ அல்லது பெரிய அளவிலான மோசடியோ நடைபெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் இரண்டு மாணவர்களின் முடிவுகளில் மட்டுமே இந்த முரண்பாடு இருப்பதால், தேர்வு நடைமுறைகள் மற்றும் அதன் நேர்மை குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஐஐடி ரூர்க்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Maruti Baleno Variants: நீங்க புது பலேனோவ வாங்கப் போறீங்களா.? அப்போ எந்த வேரியண்ட்ல என்னென்ன அம்சங்கள் இருக்குன்னு பாருங்க
நீங்க புது பலேனோவ வாங்கப் போறீங்களா.? அப்போ எந்த வேரியண்ட்ல என்னென்ன அம்சங்கள் இருக்குன்னு பாருங்க
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Embed widget