மேலும் அறிய

ICAI: இனி சிஏ பாடத்தில் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் அறிமுகம்; ஐசிஏஐ அதிரடி- இதுதான் காரணம்!

ஐசிஏஐ நிறுவனம் பட்டயக் கணக்காளர் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு மற்றும் பிற வளர்ந்து வரும் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

சிஏ பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வை அறிமுகப்படுத்த ஐசிஏஐ முடிவு செய்துள்ளது.

ஐசிஏஐ எனப்படும் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் பட்டயக் கணக்காளர் (சிஏ) பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவு பகுப்பாய்வு மற்றும் பிற வளர்ந்து வரும் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்துத் தொழில்துறைகளிலும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கணக்கியல் துறை தொடர்ந்து மாற்றமடைந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் திறனாக மாறிய ஏஐ

லட்சக்கணக்கான மாணவர்கள் சிஏ படிப்பைப் படித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஐசிஏஐயில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சிஏ துறையில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டதால், பட்டயக் கணக்காளர்களுக்கு ஏஐ மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவை அத்தியாவசியத் திறன்களாக மாறியுள்ளதாக ஐசிஏஐ தலைவர் பிரசன்னா குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ’’செயற்கை நுண்ணறிவு என்பது இனி பொறியியல் போன்ற தொழில்நுட்பத் துறைகளுக்கு மட்டுமே உரியதாக இல்லை. நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சொந்தமாகத் தொழில் செய்யும் பட்டயக் கணக்காளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும், தங்களது தொழில்முறைப் பணிகளுக்கு ஏஐ அடிப்படையிலான கருவிகள் மற்றும் தரவு பகுப்பாய்வு குறித்த அறிவு இனி அதிகளவில் தேவைப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மாற்றங்களைப் பரிந்துரைக்க குழு அமைப்பு

தற்போதைய சிஏ பாடத்திட்டத்தை ஆய்வு செய்யவும், தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் 'கல்வி மற்றும் பயிற்சிக்கான ஆய்வுக்குழு'வை (CRET) ஐசிஏஐ அமைத்துள்ளது. இந்தக் குழு பாடத்திட்டம், செய்முறைப் பயிற்சிக் கட்டமைப்பு, மென்திறன் மேம்பாடு, தகவல் தொடர்புப் பயிற்சி மற்றும் தேர்வு முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

சிஆர்இடி குழு தனது பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பரிந்துரைகளை இறுதி செய்த பிறகு, கருத்துகள் மற்றும் விவாதத்திற்காக அந்த வரைவுகள் பொதுவெளியில் வைக்கப்படும்.

ஐசிஏஐ முன்னதாக 2023ஆம் ஆண்டில் புதிய கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Iran Vs America: அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
Embed widget