மேலும் அறிய

CA Exams: மீண்டும் ஒத்திவைக்கப்படுமா சிஏ தேர்வுகள்? மே 16 முதல் 24 வரை ஆடிட்டர் தேர்வு அறிவிப்பு

CA Exams 2025: சிஏ இறுதித் தேர்வுகள் மே 16ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இடைநிலைத் தேர்வுகள் மே 22 மற்றும் 24ஆம் தேதிகளில் நடக்கும் என்று ஐசிஏஐ  அறிவித்துள்ளது. 

ஆடிட்டர் படிப்புகளுக்கு நடத்தப்படும் சிஏ தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, புதிய தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இறுதித் தேர்வுகள் மே 16ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இடைநிலைத் தேர்வுகள் மே 22 மற்றும் 24ஆம் தேதிகளில் நடக்கும் என்று ஐசிஏஐ  அறிவித்துள்ளது. ஏற்கெனவே இதற்கான அனுமதிச் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

ஐசிஏஐ தேர்வில் தேர்ச்சி கட்டாயம்

இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.

இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் தேர்வு நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.

ஆண்டுக்கு 3 முறை சிஏ தேர்வு

ஜனவரி, மே / ஜூன் மாதங்களில் என ஆண்டுக்கு 2 முறை சிஏ தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கூடுதலாக ஒரு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  முதல்நிலை, இடைநிலைத் தேர்வுகள் 3 முறை நடைபெற உள்ளன. 

புது தேதிகள் என்ன?

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மறைமுக வரிச் சட்டங்கள் குறித்த இறுதித் தேர்வு (குரூப் II) தாள் 5 மற்றும் பரிமாற்ற விலை நிர்ணயம் குறித்த INTT-AT தாள் 1 ஆகியவை மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளன. அதேபோல், மே 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஒருங்கிணைந்த வணிக தீர்வுகள் குறித்த இறுதித் தாள் 6 மற்றும் சர்வதேச வரி - பயிற்சி குறித்த INTT-AT தாள் 2 ஆகியவை மே 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

முன்னர் மே 9 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இடைநிலைத் தேர்வு (குரூப் II) தாள் 4, செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல், இப்போது மே 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. முதலில் மே 11ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தாள் 5, மே 22 ஆம் தேதி நடைபெறும், அதே நேரத்தில் மே 14ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிதி மேலாண்மை மற்றும் உத்திகள் மேலாண்மை குறித்த தாள் 6, மே 24 ஆம் தேதி மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், சிஏ தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
பயப்படாதீங்க மக்களே! பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு இல்லை..மத்திய அரசின் முக்கிய அப்டேட்
பயப்படாதீங்க மக்களே! பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு இல்லை..மத்திய அரசின் முக்கிய அப்டேட்
DMK Election Manifesto 2026: குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளுக்காகத் தனிச் சட்டம் - திமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!
DMK Election Manifesto 2026: குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளுக்காகத் தனிச் சட்டம் - திமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
பயப்படாதீங்க மக்களே! பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு இல்லை..மத்திய அரசின் முக்கிய அப்டேட்
பயப்படாதீங்க மக்களே! பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு இல்லை..மத்திய அரசின் முக்கிய அப்டேட்
DMK Election Manifesto 2026: குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளுக்காகத் தனிச் சட்டம் - திமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!
DMK Election Manifesto 2026: குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளுக்காகத் தனிச் சட்டம் - திமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!
ஃப்ரீசரில் பனிக்கட்டி மலை போல் இருக்கா? 5 நிமிடத்தில் ஈஸியா நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
ஃப்ரீசரில் பனிக்கட்டி மலை போல் இருக்கா? 5 நிமிடத்தில் ஈஸியா நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
IPL 2026 MI vs KKR: டாஸை வென்ற மும்பை பவுலிங்! பேட்டிங்கில் பொளக்குமா கொல்கத்தா?
IPL 2026 MI vs KKR: டாஸை வென்ற மும்பை பவுலிங்! பேட்டிங்கில் பொளக்குமா கொல்கத்தா?
DMK Election Manifesto: தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
Embed widget