மேலும் அறிய

சுட்டெரிக்கும் சூரியன்; தற்காத்துக்கொள்வது எப்படி? மாணவர்களுக்கு கல்வித்துறை டிப்ஸ்!

பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுரைகளை பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகின்றது. மேலும் பருவ நிலை மாற்றத்தினால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

எனவே, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

  1. அதிக வெய்யில் உள்ள நேரங்களில் குறிப்பாக பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நேரடி வெய்யில் படும் திறந்தவெளியினை பயன்படுத்துவதைத் தவிர்த்திடல் வேண்டும். இந்நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் அல்லது விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்தவெளியில் நடத்துதல் கூடாது.
  2. மாணவ / மாணவியர் தண்ணீர் தேவையான அளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  3. ஒவ்வொரு பாடவேளை துவக்கத்தின்போதும் மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
  4. மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் குடிநீர் அல்லது பள்ளியில் பயன்பாட்டில் உள்ள குடிநீரை அவ்வப்போது பருக வேண்டும்.
  5. பயணத்தின் போதும் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
  6. ஓ.ஆர்.எஸ் மற்றும் வீட்டில் தயார் செய்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர். லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம்.
  7. அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக நீர் சத்து அதிகம் நிறைந்த பழ வகைகளான தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு பழம், திராட்சை, அன்னாசி, வெள்ளரி, கீரைகள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம்.      
  8. பள்ளியில் தேவையான ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டகத்தினை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
  9. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவித்தல் வேண்டும்.
  10. மரங்களில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பறவைகளுக்கான நீர் கொள்கலன்களை அமைத்து பறவைகள் நீர் அருந்துவதற்கான சூழலை உருவாக்கித் தரலாம்.
  11. மாணவர்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளான (உ.ம்) சதுரங்கம். கேரம் போன்ற விளையாட்டுகளை மட்டும் விளையாட வாய்ப்பளிக்கலாம்.
  12. மாணவர்கள் வெயிலில் செல்லும் போது குடையை பயன்படுத்திட அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Cheapest Diesel MPV: நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
Embed widget