தர்பூசணி இரவில் சாப்பிடுவது நல்லதா? இல்லையா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இரவு நேரத்தில் வளர்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும். இதனால் தர்பூசணியை ஜீரணிக்க தாமதமாகும்.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம். இதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இரவில் சாப்பிட்டால் சிலருக்கு வயிறு உப்பசம், வாயு தொல்லைகள் வரலாம்.

தர்பூசணியில் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளது. எனவே சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

இரவில் உட்கொள்ளும் கலோரி சரியாக எரிக்கப்படாது. எனவே எடை குறைக்க விரும்பினால் சாப்பிடாதீர்கள்.

இரவில் தர்பூசணி சாப்பிட்டால் உடலில் குளிர்ச்சி அதிகரித்து சிலருக்கு சளி, தொண்டை பிரச்சனைகள் வரலாம்.

இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக தர்பூசணி சாப்பிடுவது செரிமானத்திற்கு இடையூறு விளைவிக்கும்.

காலை 10–12 மணிக்குள் அல்லது மதியம் 2–4 மணிக்குள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

நீங்கள் சாப்பிட விரும்பினால் இரவில் சிறிய அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும், அதிகமாக சாப்பிடக்கூடாது.

சர்க்கரை நோய் மற்றும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவில் தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.