Engineering Counselling : பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு : உயர் கல்வித்துறை திட்டம் என்ன?
நீட் தேர்வு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அதாவது 27ஆம் தேதி வரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 1,67,387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். அதேபோல சான்றிதழ்களை 1,56,214 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி டிஎஃப்சி மையங்களில் தொடங்கியது.
இதற்கிடையே சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய 3 பிரிவினருக்கும் 16.08.2022 அன்று கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது.
எனினும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
நீட் தேர்வு முடிவுக்கு பின்னர் பல மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போகிறது.
கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்