மேலும் அறிய

GATE 2024: நாளை தொடங்கும் பொறியியல் கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?

2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை (30ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளது.

2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை (30ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து கேட் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்துகிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

ஜனவரி 3 முதல் ஹால் டிக்கெட்

2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை (30ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது. மாணவர்கள் தாமதக் கட்டணத்துடன் அக்டோபர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.

2024 ஜனவரி 3 முதல் கேட் தேர்வுக்கான  ஹால் டிக்கெட்டைப் பெறலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மார்ச் 23ஆம் தேதி முதல் மதிப்பெண் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். 

தேர்வு முறை

கணினி வாயிலாக நடைபெறும் கேட் தேர்வு, ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் மதியம் 2.30 மணி முதல் 5.30 வரையிலும் நடைபெறுகிறது. குறிப்பாக 100 மதிப்பெண்களுக்கு 29 தாள்களுக்கு நடைபெற உள்ளது. 

தேர்வு மையங்கள் குறித்து அறிய: https://gate2024.iisc.ac.in/exam-cities/

உதவி எண்கள்: 080 2293 2644 / 3333

முழுமையான விவரங்களுக்கு: https://gate2024.iisc.ac.in/ என்ற இணைய தளத்தை க்ளிக் செய்து காணவும். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget