மேலும் அறிய

TNPSC Alert: ஜாக்கிரதை... தேர்வு முடிவுகள் குறித்து போலி பட்டியல்: எச்சரிக்கை விடுத்த டிஎன்பிஎஸ்சி

ஒருங்கிணைந்த பொறியியல்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள்‌ குறித்த போலியான பட்டியல்‌ (Fake List) சமூக வலைதளங்களில்‌ பரவி வருவதாக டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஒருங்கிணைந்த பொறியியல்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள்‌ குறித்த போலியான பட்டியல்‌ (Fake List) சமூக வலைதளங்களில்‌ பரவி வருவதாகவும் அதனை விண்ணப்பதாரர்கள்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டாம்‌ எனவும் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 02.07.2022 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள்‌ குறித்த போலியான பட்டியல்‌ (Fake List) சமூக வலைதளங்களில்‌ பரவி வருவதாகத் தெரிய வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள்‌ கருத்தில்‌கொள்ள வேண்டாம்‌ எனத் தேர்வாணையம்‌ கேட்டுக்கொள்கிறது.

தேர்வாணையத்தின்‌ அனைத்து தேர்வு முடிவுகளும்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ மட்டுமே வெளியிடப்படும்‌. அதனை https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தின்‌ மூலம்‌ அறிந்து கொள்ளுமாறும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்களின்‌ மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

தேர்வாணையத்தின்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரர்களின்‌ தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைக்‌ கூறி, சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக்‌ கூறும்‌ இடைத் தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்கள்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்‌.

இவ்வாறு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ தெரிவித்துள்ளார்.

 

*
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு குறித்து அறிவிப்பை கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அன்று  வெளிட்டது.

அந்த அறிவிப்பில், தேர்வு ஜூன் 26ஆம் தேதி முற்பகலிலும் பிற்பகலிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூலை 2ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும்  ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. 

இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் இதை மறுத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்கலாம்: Free Underwear: அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச உள்ளாடைகள்: திரும்பி பார்க்க வைக்கும் தன்னார்வ அமைப்பு!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!
Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!
TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?
TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெருமையை வருங்கால தலைமுறைகளுக்கு சொல்வோம்.." முதலமைச்சர் விஜய் வாழ்த்து
"அழுக்கேறிய மேட்டுக்குடி மனநிலை.." பிரவீன் சக்கரவர்த்தியை விளாசிய செல்வப்பெருந்தகை! காங்கிரஸில் மீண்டும் மல்லுக்கட்டு
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
Honda SP 125 on EMI: லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
TVK vs DMK:
TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
Houthi on Mecca Attack: “மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
“மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
Embed widget