மேலும் அறிய

MBBS Admission: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்?- விவரம்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம்  ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம்  ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம். 

5 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் 

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. 

அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

கால அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில்,  மாணவர்கள் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாணவர்க https://tnmedicalselection.net/  மற்றும் www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளில் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பிக்கக் கால அவகாசம்  ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருடன் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அல்லது அரசு சேவை மையங்களுக்கு (Tamil Nadu Facilitation Centre) அனைத்து அசல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரிகளுடன் உதவியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெற உள்ளது.

தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு தேதிகள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.  

விண்ணப்பக் கட்டணம்

டிசம்பர் 2023-க்குள் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, சமர்ப்பிக்க வேண்டும். 

சிறப்புப் பிரிவினரில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளும் மாற்றுத் திறனாளிகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் நேரடியாகவும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மாணவர்கள்,

செயலாளர், தேர்வுக் குழு,
மருத்துவக் கல்வி இயக்ககம்,
162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். 

நீட் தேர்வில் தமிழக அளவில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மொத்தம் 10,385 இடங்கள் உள்ள நிலையில் மருத்துவ இடம் பெறுவதில் மாணவர்களிடையே பெரும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Embed widget