மேலும் அறிய

Chennai Corporation Budget: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாலையில் ஸ்நாக்ஸ்; ஹேப்பி க்ளாஸ்; ஊக்கத்தொகை - மேயர் பிரியா பட்ஜெட்டில் அதிரடி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாணவர்களுக்கு மாலை சிறுதீனி வழங்கப்படும் என்றும் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் மேயர் பிரியா அறிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’ * சென்னை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாணவர்களுக்கு மாலை சிறு தீனி திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பள்ளிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 11ம் வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவர்.

* 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக கற்றல் பயிற்சி வழங்கப்படும்.

* 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற உதவ, இணையதளம் வாயிலாக பயிற்சி வழங்கப்படும்

* 12ஆம் வகுப்பில் 100 சதவிதம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 1000 ரூபாயில் இருந்து உயர்த்தி 10ஆயிரம் ஆக வழங்கப்படும்.

* 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்  ஐஐடி மெட்ராஸ், ஐஐஎம் பெங்களூரு, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

* சென்னை பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்த 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* சென்னை பள்ளிகளில் பொது அறிவிப்பு முறை செயல்படுத்தப்படும். 

* பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவர்.

* சென்னை பள்ளிகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

* பள்ளிகளில் மாணவர்கள் திறனை ஊக்குவிக்க இசைக் கருவிகள் வழங்கப்படும். 20 பள்ளிகளுக்கு இசைக் கருவிகள் வழங்கும் வகையில், ஒரு பள்ளிக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

* பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதிரி நாடாளுமன்ற குழு போல், மாதிரி ஐக்கிய நாடுகள் குழு அமைக்கப்படும்.

* மாணவர்களின் ஆங்கிலத் திறனை ஊக்குவிக்க சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும். 

* பள்ளிகளில் இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்’’.

இவ்வாறு மேயர் பிரியா அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
Embed widget