மேலும் அறிய

Engineering Admission: உயர்ந்த பொறியியல் சேர்க்கை; எந்தப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம்? அமைச்சர் பொன்முடி பேட்டி..

கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் பொறியியல் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இதை அடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது உயர் கல்வித் துறைச் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

’’தமிழக முதலமைச்சர் நமக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறார். இந்தி மொழி இணைப்பு குறித்தும், கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பற்றியும் மத்திய அரசின் கருத்துகளுக்கு, முதலமைச்சர் தெளிவாக அறிக்கையில் பதில் கொடுத்துள்ளார். உயர் கல்வித்துறையில் தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயர் கல்வித் துறையின் பொற்காலமாக இக்காலம் திகழ வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொற்காலமாக இருக்க வேண்டும் என்றுதான் முதல்வரும் அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்ற வகையில்தான் மாணவர்களுக்கு சமூக நீதிக் கொள்கைகளைப் பின்பற்றி வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கையும் நடத்தப்படுகிறது.

மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படுவது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதால் தூக்கம் வரவில்லை என்று முதலமைச்சர் கூறியிருக்கலாம். மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே உணவு என்ற அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழுக்கு முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

இன்னும் 1.1 லட்சம் பேருக்கு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 3-வது கட்டமாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு ஒரே கட்டமாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் காலியிடங்கள் என்பவை இருக்காது. பொறியியல் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்’’.

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Free Student Hostels : ஒரு ரூபாய் செலவு இல்லை.! மாணவர்களுக்கு இலவச விடுதி- யார் யாருக்கெல்லாம் அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு
ஒரு ரூபாய் செலவு இல்லை.! மாணவர்களுக்கு இலவச விடுதி- யார் யாருக்கெல்லாம் அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு
பள்ளிகளில் நாத்திக கொள்கைகளா? தமிழக மக்களோடு விளையாட வேணாம்- தவெக அரசுக்கு பாஜக கடும் எச்சரிக்கை!
பள்ளிகளில் நாத்திக கொள்கைகளா? தமிழக மக்களோடு விளையாட வேணாம்- தவெக அரசுக்கு பாஜக கடும் எச்சரிக்கை!
வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் மீன்வளப் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூன் 23 வரை 'லாஸ்ட் டேட்' நீட்டிப்பு!
வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் மீன்வளப் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூன் 23 வரை 'லாஸ்ட் டேட்' நீட்டிப்பு!
முக்கால்வாசி கல்லூரி, பல்கலை.களில் பேராசிரியர், முதல்வர், துணைவேந்தர் பணியிடங்கள் காலி; எச்சரிக்கை மணி
முக்கால்வாசி கல்லூரி, பல்கலை.களில் பேராசிரியர், முதல்வர், துணைவேந்தர் பணியிடங்கள் காலி; எச்சரிக்கை மணி

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: ஜுன்.19 அமைதி ஒப்பந்தம்..! USA - ஈரான் போருக்கு சுவிட்சர்லாந்தில் முற்றுப்புள்ளி - விலைவாசி குறையுமா?
ஜுன்.19 அமைதி ஒப்பந்தம்..! USA - ஈரான் போருக்கு சுவிட்சர்லாந்தில் முற்றுப்புள்ளி - விலைவாசி குறையுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Raghava Lawrence: ”மக்களை நாய் என்று சொன்னேனா? மனசாட்சி இல்லாதவனா நான்?” - ராகவா லாரன்ஸ் வேதனை
”மக்களை நாய் என்று சொன்னேனா? மனசாட்சி இல்லாதவனா நான்?” - ராகவா லாரன்ஸ் வேதனை
Trump Vs Netanyahu: பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
France Modi Macron: பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
TMC Quits NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
Embed widget