மேலும் அறிய
Advertisement
கல்வித் தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் - அண்ணாமலை பல்கலை., நடவடிக்கை போல் பிற கல்லூரிகளிலும் அரசு மேற்கொள்ளுமா.?
மாணவர்களின் தரமான கல்வியை உறுதி செய்ய இது போன்ற நடவடிக்கைகளை அரசு தொடர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில் இயங்கும் அனைத்து வித கலைக்கல்லூரிகளும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அரசு உயர் கல்வித்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இயங்க வேண்டும் என்பது விதி. அரசு கல்லூரிகள், அரசு நிதி உதவி பெரும் கல்லூரிகள், சுயநிதி கல்லுரிகள், தன்னாட்சி கல்லூரிகள் என அனைத்து வித கல்லூரிகளுக்கும் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கல்வித்தகுதி குறித்து மிகத் தெளிவாக பல்கலைக்கழக மானிய குழு வரையறுத்துள்ளது.
அதன்படி 1- P.hd முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள். 2-முதுகலை பட்டம் மட்டும் பெற்றவர்கள் NET எனப்படும் தேசிய அளவு கல்வித்தகுதி தேர்வு அல்லது SLET/SET எனப்படும் மாநில அளவு கல்வித்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்களின் அடிப்படைக் கல்வி 10 + 2 + 3 + 2 ஆண்டுகள் என்ற நேரடி தொடர் கல்வி முறையிலோ அல்லது 10, +2 வகுப்பு பள்ளிக்கல்வி முடித்து 3 ஆண்டுகள் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அடுத்த 2 ஆண்டிற்கான முதுகலை பட்டம் தொலைதூர கல்வி மூலம் பட்டம் பெற்றிருந்தால் அந்த முதுகலை தேர்ச்சியில் 55% விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. இது உதவி பேராசிரியாருக்கான கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் இவ்வாறான விதிமுறைகளை பின்பற்றாமல் உதவி பேராசிரியர்களுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 56 உதவி பேராசிரியர்களை நேற்று முன்தினம் (16.11.20203) பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.சிங்காரவேல் உயர்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் அடிப்படை கல்வி தகுதி இல்லாத நபர்களை உதவி பேராசிரியராக பணியமர்த்தி செயல்பட்டு வருவதாகவும் இதனால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளின் உயர்கல்வி கற்றல் திறன் கேள்விக்குறியாக உள்ளது.
தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட நடவடிக்கையை போன்றே பல கல்லூரிகளில் அடிப்படை கல்வித்தகுதி இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்காளாக பணிபுரிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் முதுகலை பட்டம் மட்டுமே பெற்றுள்ள நிலையில் உதவி பேராசிரியர்களாக இளங்கலை மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் நிலை உள்ளது. இதனை அரசு கண்டறிந்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் உயர தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion