மேலும் அறிய

CUET UG Result 2023: இன்று அல்லது நாளையே க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள்: தேதியை மாற்றி அறிவித்த யுஜிசி தலைவர்

க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) இரவு அல்லது நாளை காலை வெளியாகும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) இரவு அல்லது நாளை காலை வெளியாகும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். முன்னதாக ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது.

க்யூட் நுழைவுத் தேர்வு

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக  பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.  

13 மொழிகளில் தேர்வு

க்யூட் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இளநிலைத் தேர்வு 214 பாடங்களுக்கு 841 கேள்வித் தாள்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக, 534 கேள்வித் தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் 93 கேள்வித் தாள்கள் 11 பிராந்திய மொழிகளிலும் கேட்கப்பட்டன. 1.48 லட்சம் கேள்விகள் மொத்தம் கேட்கப்பட்டிருந்தன. 

இவர்களுக்கான விடைக் குறிப்புகளை ஆட்சேபிக்க ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை தேதி வழங்கப்பட்டது. இதில் 25,782 விடைத்தாள் ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இதில் 3,886 வெவ்வேறானவை. இந்தத் தகவல்கள் அனைத்தையும் பார்த்து, திருத்தி முடிவுகளை எடுக்கக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்து இருந்தார். 

கடந்த ஆண்டைக் காட்டிலும் 41 சதவீதம் மாணவர்கள் அதிகமாக இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். சுமார் 14 லட்சம் விண்ணப்பங்கள் மொத்தமாகப் பெறப்பட்டன. கடந்த ஆண்டைப் போல அல்லாமல், இந்த முறை 3 ஷிஃப்டுகளாகத் தேர்வு நடத்தப்பட்டது.

தாமதமான தேர்வு முடிவுகள்

இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூலையிலும்  வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டதாக தெரிவித்தது.

இன்று இரவு அல்லது நாளை தேர்வு முடிவுகள்

இந்த நிலையில், இளநிலைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) இரவு அல்லது நாளை காலை வெளியாகும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். ''எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேர்வு முடிவுகளை வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை பணியாற்றி வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்''  என்றும் அவர் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Embed widget