மேலும் அறிய

CUET PG 2024: க்யூட் முதுகலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்?

CUET PG Exam 2024: க்யூட் முதுகலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை என்டிஏ நீட்டித்துள்ளது. 

CUET PG Exam 2024: மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும்  பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் முதுகலை படிப்புக்கு நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை.

தேர்வு எப்போது?

இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில்  2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) மார்ச் மாதம் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனினும் தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 24 கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆகும். மாணவர்கள் இரவு 11.50 வரை இணையம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். எனினும் மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். 

CUET PG 2024: க்யூட் முதுகலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்?

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 

* CUET registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அல்லது https://pgcuet.samarth.ac.in/index.php/app/registration/instructions என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

* அதில், பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும். 

* முன்பதிவு செய்ததும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். 

* விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும். 

முன்னதாக ஜனவரி 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்தது. எனினும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிப்ரவரி 2 முதல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். மார்ச்4ஆம் தேதி தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்த தகவல்கள் வெளியிடப்படும். அதேபோல மார்ச் 7ஆம் தேதி நுழைவுச் சீட்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்கள்

கணினி முறையில் சுமார் 20 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. கடந்த முறை, நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த முறை இதைவிடக் கூடுதலாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

கூடுதல் தகவல்களுக்கு: https://nta.ac.inhttps://pgcuet.samarth.ac.in

தொடர்புகொள்ள: 011 4075 9000

இ- மெயில் முகவரி: cuet-pg@nta.ac.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay IAS and IPS Conference : இனி ஒரு குற்றமும் நடக்க கூடாது.! இன்று IAS, IPS அதிகாரிகள் மாநாடு- செம பிளானோடு சிஎம் விஜய்
இனி ஒரு குற்றமும் நடக்க கூடாது.! இன்று IAS, IPS அதிகாரிகள் மாநாடு- செம பிளானோடு சிஎம் விஜய்
DMK PROTEST : விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
Toyota Corolla Cross: மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Recreation Club fees hike : கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
Embed widget