மேலும் அறிய

CBSE: மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ; மும்மொழிக் கொள்கை, பொதுத்தேர்வில் புதிய மாற்றம்

CBSE 3 Language Policy: சிபிஎஸ்இ அதிரடி: 9ஆம் வகுப்பு மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு ரத்து; 10ஆம் வகுப்புக்கு மாற்றம் இல்லை!

இந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தற்போதைய 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் போது மூன்றாம் மொழிப் பாடத்திற்கு பொதுத்  தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதேபோல, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தற்போதைய தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பல்வேறு ஊகங்கள் மற்றும் குழப்பங்கள் நிலவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிபிஎஸ்இ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

இந்த புதிய அறிவிப்பின்படி, தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்றாம் மொழிப் பாடத்தைத் தொடர்ந்து கற்பார்கள். ஆனால், அடுத்த ஆண்டு அவர்கள் 2027-28ஆம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு செல்லும் போது, அந்த மூன்றாம் மொழிப் பாடத்திற்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தாது. மாறாக, அப்பாடத்திற்கான தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் அந்தந்த பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ளப்படும்.

அதேபோல இந்த தளர்வு 7, 8ஆம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 2 வெளிநாட்டு மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், ஓர் இந்திய மொழியை கூடுதலாக சேர்த்துப் படிக்க வேண்டும். எனினும் இதற்கு அவர்கள் பொதுத்தேர்வை எழுத வேண்டியதில்லை.

10ஆம் வகுப்புக்கு எப்படி?

தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு எந்த புதிய நடைமுறையும் திணிக்கப்படவில்லை. அவர்கள் வழக்கம் போலவே இரண்டு மொழிகள் மற்றும் மூன்று முக்கியப் பாடங்கள் என மொத்தம் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவர்களுக்கான பொதுத்தேர்வு நடைமுறைகள் தொடரும்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ், 10-ம் வகுப்பில் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாற்றங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில், அவசரமின்றி படிப்படியாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதை சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்த தேவையற்ற அச்சம் நீங்கியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Embed widget