மேலும் அறிய

நெருங்கும் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு; புதிய மாற்றங்கள்! மாணவர்கள் கவனத்திற்கு- முக்கிய அறிவிப்பு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் 2026: மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் மற்றும் புதிய மாற்றங்கள் வெளியீடு!

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2026ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வரும் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில் உள்ள மையங்களில் சுமார் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

இதனையொட்டி, பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவுரைகள்

தேர்வுகள் காலை சரியாக 10:30 மணிக்கு தொடங்கும். ஆனால், மாணவர்கள் காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. 10 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு, தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்படாது.

தேர்வு நடைபெறும் காலங்களில் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், விஐபி பயணங்கள் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அல்லது வழிமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மாணவர்கள் உள்ளூர் நிலவரம், வானிலை மற்றும் தூரத்தைக் கணக்கிட்டு, முன்கூட்டியே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது. கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்க, மாணவர்கள் தங்கள் தேர்வு மையத்தை முன்கூட்டியே சென்று பார்வையிடுவது சிறந்தது.

மூன்று முக்கிய மாற்றங்கள்

தேர்வு முறையை மேம்படுத்த, 2026ஆம் ஆண்டில் மூன்று முக்கிய புதிய முயற்சிகளை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது.

  1. 10ஆம் வகுப்பிற்கு இரண்டு பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இம்முறை அறிமுகம்.

  2. 12-ம் வகுப்பிற்கு 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (On-Screen Marking): விடைத் தாள்களைத் கணினித் திரையில் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்தல்.

  3. வினாத்தாள் மாற்றம்: 10-ம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள்களில் பகுப்பு முறை மாற்றங்கள்.

இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சங்கம் பரத்வாஜ், "ஸ்மார்ட் தேர்வு, ஸ்மார்ட் மதிப்பீடு - இதுவே புதிய இந்தியாவின் அடையாளம். தொழில்நுட்பம் சார்ந்த மதிப்பீட்டு முறைகள், தேர்வுகள் மற்றும் முடிவுகள் வெளியிடும் பணியை எளிமையாகவும் துல்லியமாகவும் மாற்றும்’’ என்று தெரிவித்தார்.

பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்தை அடைவதை உறுதி செய்யுமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Embed widget