மேலும் அறிய

CBSE 12th Result 2026: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போ? விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி? சர்ச்சைக்கு சிபிஎஸ்இ முற்றுப்புள்ளி!

CBSE Class 12th Result 2026: மே மூன்றாம் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம்- சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர்.

2026ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நாளை வெளியாகும் விரைவில் வெளியாகும் என்று ஊகங்கள் எழுந்த நிலையில், தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்தும் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி உள்ளதா என்பது சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் தேர்வு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?

2026ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு மையங்களிலும் 26 வெளிநாடுகளிலும் நடந்தது. சுமார் 18.5 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதி இருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெற்றன. இந்தப் பணியில் குளறுபடி ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.

அதேபோல வெகு விரைவில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. எனினும் இந்த 2 தகவல்களையும் சிபிஎஸ்இ மறுத்துள்ளது.  

தேர்வு முடிவுகள் எப்போது?

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் கூறும்போது, ''டிஜிட்டல் முறை மதிப்பீட்டில் குளறுபடி ஏற்பட்டதாக வெளியான தகவலில் எள்ளளவும் உண்மையில்லை.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மே மூன்றாம் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை எங்கே காணலாம்?

மாணவர்கள் cbseresults.nic.incbse.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகிய சிபிஎஸ்இ-ன் இணைய தளங்களை க்ளிக் செய்து, தங்களின் விவரங்களை உள்ளிட்டு, தெரிந்து கொள்ளலாம்.

இணைய தள சர்வர் முடங்கும் சூழல் ஏற்பட்டால், டிஜி லாக்கர் செயலி, உமாங் செயலி, குறுஞ்செய்தி, ஐவிஆர்எஸ் ஆகியவற்றின் வழியாகவும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

கடந்த காலங்களில் தேர்ச்சி விகிதம் எப்படி?

  • 2025: 88.39 %
  • 2024: 87.98 %
  • 2023: 87.33 %
  • 2022: 92.71 %
  • 2021: 99.37 %
  • 2020: 88.78 %

வழக்கமாக மே 2ஆம் வாரத்தில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். கடந்த 2025ஆம் ஆண்டு 10, 12 என இரு வகுப்பு தேர்வு முடிவுகளும் மே 13ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதேபோல 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 வெளியானது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget