CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
CBSE 12th Results 2025 Region Wise: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய அளவில் விஜயவாடா மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.

CBSE 12th Results 2025 Region Wise: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய அளவில் சென்னை மண்டலம் மூன்றவாது இடம் பிடித்துள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் தேர்வு எழுதிய 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 பேரில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 88.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு பதிவான 87.98 சதவிகிதத்தை காட்டிலும், 0.41 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 91.52 சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருந்த மானவிகள் நடப்பாண்டில், 012 சதவிகிதம் அதிகரித்து 91.64 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் கடந்த ஆண்டில் 85.12 சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில் நடப்பாண்டில், 0.58 சதவிகிதம் அதிகரித்து 85.70 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்தமாக மாணவர்களை காட்டிலும் மாணவிகள், 5.94 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு எழுதிய, மூன்றாம் பாலினத்தவர் அனைவருமே நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடம் பிடித்து அசத்திய விஜயவாடா:
மண்டல வாரியான தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் கடந்த மூன்று ஆண்டுகளிலும் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தது. ஆனால் இந்த முறை, விஜயவாடா மண்டலம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அந்த மண்டலத்தில் தேர்வு எழுதியவர்களில் 99.60 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். திருவனந்தபுரம் மண்டலமானது இந்த முறை இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதன்படி, அந்த மண்டலத்தில் தேர்ச்சி எழுதியவர்களில் 99.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
| வ. எண் | மண்டலம் | தேர்ச்சி சதவிகிதம் % |
| 1 | விஜயவாடா | 99.60 |
| 2 | திருவனந்தபுரம் | 99.32 |
| 3 | சென்னை | 97.39 |
| 4 | பெங்களூரு | 95.95 |
| 5 | டெல்லி மேற்கு | 95.37 |
| 6 | டெல்லி கிழக்கு | 95.06 |
| 7 | சண்டிகர் | 91.61 |
| 8 | பஞ்ச்குலா | 91.17 |
| 9 | புனே | 90.93 |
| 10 | அஜ்மெர் | 90.40 |
| 11 | புவனேஷ்வர் | 83.64 |
| 12 | கவுகாத்தி | 83.62 |
| 13 | டேராடூன் | 83.45 |
| 14 | பாட்னா | 82.86 |
| 15 | போபால் | 82.46 |
| 16 | நொய்டா | 81.29 |
| 17 | பிரயாக்ராஜ் | 79.53 |
மாஸ் காட்டிய சென்னை மண்டலம்?
சென்னை மண்டலம் 97.39 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 98.47 சதவிகிதம் ஆக இருந்த சென்னை மண்டலத்தின் தேர்ச்சி விகிதம், நடப்பாண்டில் 1.08 சதவிகிதம் அளவிற்கு சரிந்துள்ளது. அதேநேரம், கடந்த 2022, 2023 மற்றும் 2024 ஆகிய மூன்று ஆண்டுகளில், தேசிய அளவில் தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்த சென்னை மண்டலம் நான்காவது முறையாகவும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சென்னை மண்டலம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில், தேசிய அளவில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் வாரியான முடிவுகள்:
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் வாரியான தேர்வு முடிவுகளில், ஜவஹர் நவோத்யா பள்ளிகள் 99.29 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து கேந்திரிய வித்யாலாய மற்றும் STSS பள்ளிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
| வ.எண் | கல்வி நிலையங்கள் | தேர்ச்சி விகிதம் % |
| 1 | ஜவஹர் நவோத்யா | 99.29 |
| 2 | கேந்திரிய வித்யாலயா | 99.05 |
| 3 | STSS | 98.96 |
| 4 | அரசு உதவி பள்ளிகள் | 91.57 |
| 5 | அரசுப்பள்ளிகள் | 90.48 |
| 6 | தனியார் பள்ளிகள் | 87.94 |





















