மேலும் அறிய

CAT 2025: சூப்பர் செய்தி.. கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!- எப்போ வரை?

CAT 2025 Registration: நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதும் பொது நுழைவுத் தேர்வாக கேட் (CAT) தேர்வு உள்ளது. ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்.கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐஐஎம் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய 21 ஐஐஎம்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு கேட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 100க்கும் மேற்பட்ட ஐஐஎம் அல்லாத கல்வி மேலாண்மை நிறுவனங்களும் CAT மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. 

நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதும் பொது நுழைவுத் தேர்வாக கேட் (CAT) தேர்வு உள்ளது. ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இருக்கும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 

3 கட்டங்களாகத் தேர்வு

இந்த ஆண்டு ஐஐஎம் கோழிக்கோடு, கேட் தேர்வை நடத்துகிறது. பொது நுழைவுத் தேர்வு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

பர்சன்ட்டைலாக மாற்றப்படும்

3 அமர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் நார்மலைஸ் ஆக்கப்படும். பிறகு அவை பர்சன்ட்டைலாக மாற்றப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு - ரூ.1,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற அனைத்துத் தேர்வர்களுக்கும் - ரூ.2600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு விண்ணப்பிக்க, செப். 13ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்த நிலையில், தற்போது 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு குறித்த அறிவிக்கையை  https://www.iimcal.ac.in/sites/default/files/2025-07/CAT-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget