மேலும் அறிய

School Reopening: திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

திட்டமிட்டபடி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று தகவல் வெளியான நிலையில், பள்ளிகள் திறப்பை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலால் 2022- 23ஆம் கல்வி ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. 10, 11, 12 ஆஅம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்றன. குறிப்பாக பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டன.

தொடக்கப் பள்ளித் தேர்வுகள்

இந்த நிலையில்  1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தொடக்கப் பள்ளித் தேர்வுகள் (ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11-ம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது. 

இதை அடுத்து மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டது. ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 1ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தள்ளிப்போகும் என்று வெளியான தகவல்

தமிழ்நாட்டில் கோடை  வெயில் சதமடித்து வருகிறது. மாணவர்களுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

6 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 5ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

கல்வியாண்டு விவரங்கள்

2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

டிசம்பரில் அரையாண்டுத் தேர்வு

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ஆம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. அதேபோல டிசம்பர் 13ஆம் தேதி 6 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget